
இந்தியாவில் பல்வேறு வகையான கலாசாரங்கள் இருப்பதை பெருமையாக அது குறிப்பிட்டுள்ளது. வெப்சைட்டின், முகப்பு பக்கத்தில், 'ஏக்பாரத் சிரேஷ்ட பாரத்' (ஒரே இந்தியா சிறந்த இந்தியா) என்று ஹிந்தி, தெலுங்கு உட்பட இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. ஆனால், செம்மொழியான தமிழ் மொழிக்கு அதில் இடம் இல்லை. நம்மை விட குட்டி மாநிலமான கேரளாவின் மலையாளம் கூட முகப்பில் இடம்பெற்றுள்ள நிலையில், கல் தோன்றி, மண்தோன்றா காலத்தே உருவான தமிழுக்கு அங்கு இடமில்லை. மாநிலங்களிடையே ஒற்றுமையை வளர்ப்பது நோக்கம் என்று அடைமொழி கொடுத்துக்கொண்டுள்ள வெப்சைட்டில், தாய் போல மொழியை போற்றும், மிக முக்கியமான ஒரு மாநிலதின் தாய் மொழி இல்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்ட துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து, தமிழுக்கு உரிய, உயர்ந்த இடத்தை கொடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக