வியாழன், 19 அக்டோபர், 2017

"Kalaignar_Returns" கலைஞர் ,, ஓரிரு நாட்களில் அதிசயம் நடக்கும் ,,,, மருத்துவர் கோபால் அறிவிப்பு


தன் வழக்கமான பணிகளை மீண்டும் தொடங்கவுள்ளார் #கலைஞர்.!

நவம்பர் 7 முதல், தமிழகம் முழுதும் 180 நாட்கள் எழுச்சிப்பயணம் செல்கிறார் ஸ்டாலின்! 
சென்னை: கலைஞர் கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாளில் அதிசயம் நடக்கும் என அவரது குடும்ப டாக்டர் கோபால் கூறியுள்ளார். சென்னை முரசொலி பவள விழா கண்காட்சியை காண தி.மு.க. தலைவர் கருணாநிதி பார்வையிட்டார்.
உடல் நலிம் பாதிக்கப்பட்டிருந்த கலைஞர்  கடந்த ஓராண்டாக அவர் வெளியே வராமல் இருந்து வந்தார். இன்று அவர் சக்கர நாற்காலியில் முரசொலி விழா நடக்கும் அரங்கத்திற்கு வந்தார். தி.மு.க. தலைவர் . உடலநலக் குறைவால் வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார். அவரது புகைப்படம் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது. இதன் மூலம் அவர் நல்ல உடலத்துடன் இருப்பதை வெளிப்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் முரசொலி பவள விழா மற்றும் கண்காட்சி நடந்தது. அங்கு வைக்கப்பட்டிருக்கும் தனது மெழுகுச்சிலையை பார்வையிட்டார். அத்துடன் மெழுக்குசிலையுடன் அவர் புகைப்படமும் எடுத்து கொண்டார். சுமார் ஒரு ஆண்டுக்கு பின்னர்  கலைஞர் அங்கு வந்த செய்தி அறிந்து  மக்கள் முரசொலி அலுவலகத்தை நோக்கி படை எடுத்தனர்

கருத்துகள் இல்லை: