செவ்வாய், 17 அக்டோபர், 2017

காற்றில் சராசரி மாசு அளவு PM 2.5. ஆனால் ஒரேநாள் தீபாவளி வெடியில் எகிறிய அளவு PM 350

Shalin Maria Lawrence :  தொழிற்சாலை மற்றும் வண்டிகளினால் ஏற்படாத மாசு ஒரு நாளிலேயா பாட்டாசு வெடிக்குரதுல ஏற்பட போகுது ?
ஆமாம்.
1. பல வருடங்கள் ஒன்றாய் சேர்ந்து ஒரு தொழிற்சாலை கக்கும் மாசை ஒரே நாளில் ஏற்படுத்துகிறது பட்டாசுக்கள் .
2. கற்று மாசு, நீர்மாசு, நிலமாசு, ஒலி மாசு இந்த நான்கும் ஒன்றாய் பல மடங்கு பெருகுகிறது தீபாவளி நாளில், பட்டாசுகளால்.
3. Lets Talk Numbers. காற்றில் கலந்திருக்கும் மாசு துகள்களின் சராசரி அளவு PM 2.5. ஆனால் தீபாவளி நேரங்களில் இந்த மாசின் அளவு PM 350 வரை சரமாரியாக அதிகரிக்கிறது. இந்தியாவின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஒவ்வொரு முறையும் தீபாவளிக்கு முன்னும் பின்னும் நடத்தும் ஆய்வில் இந்த தகவல் நமக்கு கிடைக்கிறது. சிகரட் புகை, தொழிற்சாலை புகை, மோட்டார் புகை இவைகளுக்கும் பட்டாசு புகைக்குமான மாசு தீவிரத்தை அவர்களின் ஆய்வறிக்கைகளில் பட்டாசுக்கு வக்காலத்து வாங்கும் முட்டாள்கள் தெரிந்துகொள்ளலாம் .

4. தீபாவளி வெடிகளின் சத்தத்தில், விலங்குகள், பறவைகள் குழந்தைகள், பெரியவர்கள், இருதயநோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் கடுமையான சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.
5. இது மட்டுமல்லாமல் பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை பற்றி எதிர்க்கருத்து கூறினால் அதற்கு மதச்சாயம் பூசும் முட்டாள்கள் ஒரு முக்கிய விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும் . தமிழ்நாட்டில் அதிக பட்டாசு வாங்குவது எல்லா மதத்தினரும்தான். எனக்கு தெரிந்த முக்கால்வாசி கிறிஸ்தவ முட்டாள்களும் பட்டாசு வெடிக்கின்றனர்.
இந்த பட்டாசினால் பாதிக்கப்படுவது ராமன் மட்டும் என்றால் கூட பரவாயில்லை, இந்த பட்டாசினால் பாதிக்கப்படுவது ராமன், டேவிட், அப்துல்லா மற்றும் பெரியாரும்தான் .
மதத்தின் பெயரால் மனிதர்களை கொல்வதற்கு பெயர் தீவிரவாதம் என்றால் தீபாவளிக்கு பட்டாசு வெடித்து மற்றவர்களை துன்புறுத்துவதும் மத தீவிரவாதம்தான்.
உன் நம்பிக்கையை உன்னோடு வைத்துக்கொள். அது என் மூச்சுக்காற்றை நிறுத்த கூடாது. பல வருடங்களுக்கு முன் கல்லறை திருநாளுக்கு கல்லறையில் பூவைக்க போன என் மாவின் கண்ணில் தீபாவளி ராக்கெட் அடித்து அவர்கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் இன்னும் பார்வை சரி இல்லாமல் தான் இருக்கிறார். Bursting of crackers should be declared criminal act in this country.
6. அது மட்டுமில்லாமல் ஆண்டுதோறும் நடக்கும் பட்டாசு தொழிற்சாலைகளின் விபத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 10 வருத்தத்தில் பதிவு செய்யப்பட்ட உயிரிழப்புகள் 300. மற்றும் தொழில் சாலையில் வேலை செய்வோர் பலரும், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைக்கு பெரிய அளவில் பாதிக்கப்படுவதும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
7. சாதி கொடுமை.
தீபாவளி பட்டாசில் என்ன சாதிய கொடுமை இருந்துவிட போகிறது என்று கேட்பீர்கள். சொல்லுகிறேன் .
உங்கள் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு, தெருக்களிலும், சாலைகளிலும் குவிந்து கிடைக்கும் அத்தனை விஷமருந்து கலந்த குப்பைகளையும் அகற்றுவது ஒடுக்கப்பட்டவன்.
நாம் எவ்வளவு குப்பை போட்டாலும் கையால் அள்ள ஒரு சாதி இருக்கிறது என்றுதானே இவ்வளவு பட்டாசு? இதே அந்த குப்பைகளை நீங்களே அகற்ற வேண்டுமென்றால் இவ்வளவு பட்டாசு வெடிப்பீர்களா இதயமற்றவர்களே ?
7. குழந்தை தொழிலாளர்முறை
உங்கள் குழந்தை பட்டாசு வெடிக்க வேண்டுமென்பதற்காக இன்னொரு குழந்தையின் படிப்பு நிறுத்தப்படுகிறது, கொத்தடிமையாக்கபடுகிறது. விஷமருந்தில் புரளவிடப்படுகிறது.
இதற்குமேலே என்னை பாதித்த விஷயம் என்ன தெரியுமா?
இதில் 90 சதவிகித குழந்தைகள் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களை ஒவ்வொருவரையும் மீட்கும் பணியில் இருக்கும் சமூக சேவகர்களிடம் சென்று பேசி பாருங்கள் உண்மை தெரியும்.
பட்டாசின் நச்சு புகையை சுவாசித்துக்கொண்டே... ஏன் பட்டாசு வெடிக்க கூடாது என்று கேட்கும் முட்டாள்களை பார்க்கும்போது... என்னத்த சொல்ல...
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் வரும்.


தீபாவளி பட்டாசு
சாதி வன்முறை, மத தீவிரவாதம், அறிவுபற்றாகுறை
______________________________
கிறிஸ்துமஸ்க்கு கேக் வெட்டுறீங்க, ஆடு வெட்டுறீங்க, பட்டாசு வெடிச்சா மட்டும் உங்களுக்கு பொத்துக்கிட்டு வருதா ??
ஆமா பொத்துக்கிட்டு வருது. கேக் வெட்டுனா 10 பேரு சாப்பிடலாம், ஆடு வெட்டுனா 50 பேரு சாப்பிடலாம். பட்டாச சாப்பிட முடியுமா.? கேக் வெட்டும் போது சத்தம் வராது, ஆடு கறிக்கடைக்கு கறியாதான் வரும், அது கத்துற சத்தம் இதுவரைக்கும் நான் கேட்டது இல்ல. அதுவும் இல்லாம உங்க கொண்டாட்டங்கள் எல்லாம் மத்தவங்கள பாதிக்காம இருக்கணும், கேக் பிரியாணி எல்லாம் இதுவரைக்கும் அத சாப்பிடாதவங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது இல்ல. ஆனா உங்க பட்டாசு, எங்க நிம்மதிய கெடுக்குது, எங்க ஆரோக்கியத்தை பாதிக்குது, விபத்துக்களை ஏற்படுத்துது ஷாலின்

கருத்துகள் இல்லை: