வெள்ளி, 20 அக்டோபர், 2017

கமல்ஹாசனின் பகிரங்க மன்னிப்பு – கருத்துக் கணிப்பு

பணமதிப்பழிப்பு நடவடிக்கையை ஆய்வு செய்யாமல் அவசரப்பட்டு ஆதரித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்கிறாராம் கமல். இதே போன்று மோடியும் “அவசரப்பட்டு மன்னிப்பு” கேட்டால் பெருந்தன்மையாக இருக்குமாம்.
வினவு :தீபாவளிக்கு ஒரு புயல் கரையைக் கடக்கும் என்றார்கள். அந்தப் புயல் கரையைக் கடக்கவில்லை. ஆனால் வாரா வாரம் திருவாளர் கமல்ஹாசன் அவர்கள் “என்னுள்ளே மையம் கொண்ட புயல்” தொடரை ஆ.விகடனில் வெளியிடுகிறார்.
ஒருத்தருக்குள்ளே மையல்தான் வரும். புயல் வருவதாக இருந்தால் ஏதோ சில பிரச்சினைகளால் அவர் பாதிக்கப்பட்டு பாரதூரமான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கும். கமல் அப்படிப்பட்டவர் இல்லை. அவர் சாதரணமாக நடந்தாலே கண்ணி வெடிக்குரிய சோதனைகள் மாதிரி செக் பண்ணிவிட்டுத்தான் உலவ விடுகிறார்கள் அவரது அணியினர்.
கமலைப் போன்றவர்களின் புயலை புரளி என்பதா, இல்லை புதிரா என டிவிட்டர் துவங்கி ஃபேஸ்புக் வரை அவ்வ்ப்போது ஆய்வுகள் நடக்கின்றன. நடக்கட்டும்! செயலுக்கு வழியில்லாத போது சிதறல்களே மாபெரும் ஆய்வுகளாவதில் தவறில்லை!

மேற்படி புயல் தொடரில் மூன்றாமாவது பாகத்தில் அன்னார் ஒரு பகிரங்க மன்னிப்பு கேட்டதாக ஒரு செய்தி வெளியானது. என்னவாம்?
பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, மோடி கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறார் என்று நம்பி அதை ஆதரித்தவர்கள் பலர். அவர்கள் பெரும்பான்மை மக்கள்.
இது மோசடி என்று தெரிந்தும், இதை எதிர்த்துப் பேசினால், கருப்பு பண பேர்வழி என்ற முத்திரையை மோடி நம் மீது குத்தி விடுவார் என்று பயந்து வரவேற்றவர்கள் பலர்.
ரஜனிகாந்த் முதல் பல கருப்பு பண நட்சத்திரங்களும் மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்தார்கள்.
முதல் நாளன்றே இதனை எதிர்த்து, இதன் நோக்கத்தை அம்பலப் படுத்தியவர்கள் சிலர். அவர்கள் ஆய்வாளர்கள் மற்றும் இடதுசாரிகள்.
அன்று கமல் இதை ஆதரித்தார்.

Click to enlarge
கமல்ஹாசனின் பகிரங்க மன்னிப்பு குறித்து என்ன கருதுகிறீர்கள்?
பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட சில மாதங்களிலேயே அதனால் அழிந்தவர்கள் கருப்பு பண பேர்வழிகள் அல்ல, சாதாரண மக்களும் அவர்களுடைய சிறு தொழில்களும்தான் என்பது உலகத்துக்கே வெளிச்சமாகிவிட்டது.
போனமாதம் (செப் 22 ஆம் தேதியன்று) பணமதிப்பழிப்பு பற்றி கேட்டபோது, உரிய ஆதாரம் இல்லாமல் அதனை விமரிசிக்க முடியாது என்று பதிலளித்தார் கமலஹாசன். ஸ்வச் பாரத், பண மதிப்பழிப்பு போன்ற நடவடிக்கைகளின் நோக்கம் நேர்மையானது என்று மோடிக்கு சான்றிதழ் வேறு கொடுத்தார்.
தினத்தந்தி, தினகரன், நக்கீரன், ஜுவி படிக்கின்ற சராசரித் தமிழர்கள் மட்டுமின்றி, நம்மாள் செய்வது சரியில்லை என்று அவாளுக்கே புரியத்தொடங்கிய காலத்திலும் கமலுக்கு இந்த உண்மை புரியவில்லையாம். உலக சினிமா, உலக கவிதை, இலக்கியமெல்லாம் படிக்கும் இந்த ஞானிக்கு பொருளாதார அறிஞர்கள் சிலர் தொலைபேசியில் சொன்ன பிறகுதான் மேட்டரே புரிந்ததாம்.
அதற்குப் பிறகுதான் கமலின் இந்த மன்னிப்பு. தான் மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி மோடியையும் மன்னிப்பு கேட்குமாறு சிபாரிசு செய்திருக்கிறார் கமல். இதுதான் மிகப்பெரிய கேலிக்கூத்து.
ஐயா, செல்லாத நோட்டு விவகாரத்தில் செத்தவர் எத்தனை, வியாபாரத்தை இழந்தவர் எத்தனை பேர், வேலைகளை விட்டு துரத்தப்பட்டவர் எத்தனை பேர் என்பதை உலகமே அறியும். ஆழ்வார்ப்பேட்டையில் இருந்து டவிட்டரிலும், தனது கிச்சன் கேபினட் மூலமாக  உலகையும் பார்க்கும் கமல் அவர்களுக்கு அது தெரியாததில் வியப்பில்லை.
முக்கியமாக ஹிட்லர் கூட ஒரு ஹாய் மன்னிப்பு என்று கேட்டால் பெருந்தன்மை என ஆசிரியப்பா பாடும் வல்லமை கொண்ட கமல்ஹாசனின் அரசியல் அறிவு, பிரவேசம் குறித்து யோசித்தால் டெரராக இருக்கிறது.
விடுங்கள்!
கமல்ஹாசனின் அந்த பகிரங்க மன்னிப்பு குறித்து என்ன கருதுகிறீர்கள்? வாக்களியுங்கள்
  • நேர்மையான மன்னிப்பு
  • டேமேஜ் ஆன இமேஜை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சி
  • கோழைத்தனம் பாதி சந்தர்ப்பவாதம் பாதி
  • நேர்மையில்லைதான், இருந்தாலும் மன்னிப்பு கேட்டிருக்கிறாரே
_____________
இந்த கருத்துக்கணிப்பு உங்களுக்கு பயனளித்ததா?

கருத்துகள் இல்லை: