சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து கனிமொழியை தொடர்பு கொண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கேட்டறிந்தார்.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள
அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து, அகில இந்தியக்
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், முன்னாள் மத்திய
அமைச்சர் குலாம் நபி ஆசாத், நாடாளுமன்ற மாநிலங்களவை குழு கழகத் தலைவர்
கனிமொழி அவர்களிடம் தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தனர்.
மேலும் புதுவை முதல்வர் நாராயணசாமி
மற்றும் புதுவை அமைச்சர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி. தங்கபாலு,
ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா,
ஜெ.எம். ஆரூண், குஷ்பூ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விசுவநாதன், நாசே.
ராமச்சந்திரன் ஆகியோரும், கவிப்பேரரசு வைரமுத்து, பேராசிரியர் சுப.
வீரபாண்டியன், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விக்ரம ராஜா,
எஸ்.வி.சேகர் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களும், முன்னணியினரும்
நேரில் வந்து திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதியின் உடல்
நிலை குறித்து கேட்டறிந்தார்கள்.
மேலும் தொலைபேசி வாயிலாக கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கவிக்கோ அப்துல் ரகுமான், டி.கே. ரெங்கராஜன், எம்.பி., ஆகியோர் கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது தினமணி.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக