முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டனர். உள்ளிட்ட பல அடுக்கடுக்கான புகார்களை அதில் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக கடந்த மே 15-ஆம் தேதி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தேன் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் தலைமை தேர்தல் அதிகாரி நஜீன் ஜைதியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட நான் ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கும் அநியாங்களை பற்றி கூறினேன்
ஆனால் அவர் இவற்றை பரிசீலிப்பதாக கூறிவிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே இந்த காரணங்களை வைத்து அந்த தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என பிரவீனா தனது மனுவில் கூறியிருந்தார்.;
;இந்த மனுவை விசாரித்த நீதிபதி இது குறித்து விளக்கம் அளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.">பிரவீணா கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கும் பட்சத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றி செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக