
‘‘உங்களை நம்பித்தான் இருக்கேன்!”அழகிரி எதிர்காலம் குறித்து செல்வி தன் தந்தையிடம் கொஞ்சம் உருக்கமாகப் பேசினார். அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டே இருந்தார் கருணாநிதி. ‘‘எனக்குத் தெரியாத மூன்று தொகுதிகளின் தேர்தல் முடியட்டும். அதற்குப் பிறகு பார்க்கலாம். அதுவரை பொறுமையாக இருக்கட்டும்” என்று சொல்லியுள்ளார் கருணாநிதி. அதற்குப் பதில் சொல்லாமல் அழகிரி அமைதியாக இருந்துள்ளார். காந்தியும், தனது கணவருக்காகப் பரிந்து பேசியுள்ளார். மேலும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கனிவோடு விசாரித்துள்ளார். செல்வி எப்படியும் அழகிரியைக் கட்சிக்குள் கொண்டுவந்து விடவேண்டும் என்று தொடர்ந்து கருணாநிதியிடம் பேசிவருகிறார். கருணாநிதியைப் பார்த்துவிட்டுக் கிளம்பியபோது... அழகிரி, ‘‘உங்களுக்கு உடம்பு சரியில்லைனு கேள்விப்பட்டதும், பதற்றத்துலதான் அன்னைக்கு வந்து பார்த்தேன். நான் வெளியூர் போறதால என் மனைவியோடு வந்து உங்களைப் பார்த்துட்டுப் போறேன். உங்க பேச்சுக்கு மரியாதை கொடுத்து நான் அமைதியாக இருக்கேன் அப்பா. நீங்க உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களை நம்பித்தான் இருக்கேன்” என்று உருக்கமாகப் பேசிவிட்டு வந்தார்.
‘ஸ்டாலின்தான் என் அரசியல் வாரிசு!’
‘ஸ்டாலின்தான் என் அரசியல் வாரிசு’ என்று கருணாநிதி சொன்னதை... அவரது குடும்பத்தில் இருந்த பலரும் ரசிக்கவில்லையாம். அழகிரி மீது கருணாநிதி தனி பிரியம் வைத்திருந்தார் என்பது அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும்.
செல்விக்கும் ஸ்டாலின் மீது வருத்தம்!
இளைமைக் காலத்தில் இருந்தே எதையும் தடாலடியாகச் செய்யும் அழகிரியின் சுபாவம் கருணாநிதிக்குப் பிடித்திருந்தது. ஆனால், அதுவே கட்சிக்குள் பிரச்னையாக வந்ததுதான் அப்பாவுக்கும், மகனுக்கும் மனஸ்தாபத்துக்குக் காரணமாகிவிட்டது. அழகிரிக்காக ஆரம்பத்தில் இருந்தே தனது தந்தையிடம் பேசி வருகிறார் செல்வி. ஆனால், அழகிரி உள்ளே வருவதற்கு ஸ்டாலின் தரப்பு ஆரம்பத்திலிருந்தே முட்டுக்கட்டை போட்டுவருகிறது. ஸ்டாலின் மீது அந்த வருத்தம் செல்விக்கும் உண்டாம். அப்பா மகனிடையே இந்த உருக்கமான சந்திப்பின் பலன் அழகிரிக்கு கிட்டுமா என்பது கருணாநிதி கெடுவிதித்த தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரிந்துவிடும்.
- அ.சையது அபுதாஹிர் | படம்- குமரேசன் விகடன்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக