வெள்ளி, 4 நவம்பர், 2016

இருமடங்காகிறது எம்.பி.க்களின் சம்பளம்!

மக்களவையில் 545 பேரும், மாநிலங்களவையில் 245 பேருமாக மொத்தம் 790
எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. அத்துடன் பல்வேறு படிகளும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் எம்.பி.க்களின் ஊதியம் மற்றும் படிகளை நிர்ணயிக்க நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தலைமையிலான அந்த குழு, எம்.பி.க்களின் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்த பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தெரிகிறது. இதன் மூலம் எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சம் மற்றும் இதர படிகள் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.thetimestamil.com

கருத்துகள் இல்லை: