இந்திய - இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில்,
கடந்த 27.1.2014-ல் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத் துறை
இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக, இலங்கை மீனவப் பிரதிநிதிகளின்
முதல்கட்டப் பேச்சுவார்த்தையும், 12.5.2014-ல் கொழும்பில் உள்ள ஹரிட்டாஸ்
அரங்கத்தில் 2-ம் கட்டப் பேச்சுவார்த்தையும், சென்னை தேனாம்பேட்டையில்
24.3.2015-ல் 3-ம் கட்டப் பேச்சும் நடைபெற்றன.
இந்த 3 கட்ட பேச்சுவார்த்தை களிலும் தமிழக விசைப்படகு மீனவர்கள் தடை
செய்யப்பட்ட இரட்டைமடி, ரோலர் மடி, சுருக்கு மடி முறைகளைப் பயன்படுத்தி
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப் பதை முற்றிலுமாக கைவிட வேண் டும் என
இலங்கை மீனவப் பிரதி நிதிகள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இந்த மீன்பிடி முறைகளை மாற்றிக்கொள்ள 3 ஆண்டு காலம் அவகாசம் தேவை
எனவும், இதற்குப் பதிலாக இலங்கை கடற்பரப்பில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு
தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு பதில் 90 நாட்கள்
குறைத்துக்கொள்வதாகவும் தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இலங்கையில் நடைபெற்ற 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட
இலங்கை மீனவர் களின் கடல்வளங்களைத் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவந்து
தங்கள் வாழ்வாதாரத்தை அழித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர். அதே சமயம்
பாரம்பரியமாக இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடித்து வந்த கடற்பரப்பில்
தாங்கள் தொழில் செய்யும் உரிமையை இலங்கை மீனவர்கள் மறுக்கக் கூடாது எனவும்
தமிழக மீனவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதனால் 3 கட்ட மீனவப்
பேச்சுவார்த்தை களிலும் சுமுக உடன்பாட்டை எட்ட முடியாமல் போனது.
இந்நிலையில் இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண
வலியுறுத்தி இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை வெளியுறவு
அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு
இடையேயான பேச்சுவார்த்தை நவ.5-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னதாக இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவார்த்தை
டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த
மீனவப் பிரதிநிதிகள் 15 பேரும், இலங்கை மீனவப் பிரதிநிதிகள் 10 பேரும்
பங்கேற்கின்றனர்.
இந்த மீனவப் பேச்சு tamilthehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக