டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் சடலத்தை
காண காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மருத்துவமனைக்கு சென்ற போது டெல்லி காவல்துறை அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததற்காக ராகுல் காந்தியை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். இதே போல், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை ராணுவ வீரரின் சடலத்தை பார்க்க சென்ற டெல்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளனர். மேலும், விடுவிக்கப்பட்ட ராகுல் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஒரே நாளில் அம்மாநில முதல்வர், துணை முதல்வர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. விகடன்.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக