வியாழன், 3 நவம்பர், 2016

துரைமுருகன் : ஜெயலலிதாவுக்கு தெரியாமல் பல சொத்துக்களுக்கு ரேகை உருட்டப்படுகிறது

தர்மபுரி : ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால்  அ.தி.மு.க. மட்டுமல்லாமல், தமிழக அரசியல் களமே பரபரத்துக்கிடக்கிறது. இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சில கட்சிகளும், இதனால் அவர்கள் பயன்பட்டு விடக்கூடாது என சில கட்சியினரும் செயல்பட ஒட்டுமொத்த அரசியல் களமும் பரபரத்துக்கிடக்கிறது.தி.மு.க. அரசியல் நிகழ்வுகளில் மட்டுமல்லாது, திருமண விழாக்கள் போன்ற தனிப்பட்ட விழாக்களிலும் இந்த விவகாரம் தான் பேசப்பட்டு வருகிறது. தர்மபுரியில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி இல்லத் திருமண விழாவில், "கடந்த  அ.தி.மு.க ஆட்சியை நான் ஐ.சி.யுவில் இருக்கிறது என்று விமர்சனம் செய்திருக்கிறேன். இப்போது அப்படி பேச முடியாத சூழல் நிலவுகிறது," என்று மு.க. ஸ்டாலின் பேச... "ஜெயலலிதாவுக்கு தெரியாமல் பல சொத்துக்களுக்கு ரேகை உருட்டப்படுகிறது," என துரைமுருகன்  திரி கொளுத்த... இந்த விவகாரம் பரபரக்கிற
தர்மபுரியில் நடந்த தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., தடங்கம் சுப்பிரமணி இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின் “கடந்த ஆட்சியில் எல்லாத்திட்டங்களையும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாகத்தான் ஜெயலலிதா துவக்கி வைத்தார். அதை கலைஞர் தமிழகத்தில் நடப்பது ஆட்சி அல்ல. கான்ஃபரன்ஸ் காட்சி என்று விமர்சித்தார். இப்போதோ அப்போலோ காட்சி நடக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம். காவிரி பிரச்சனை தொடர்பாக அ.தி.மு.க., தான் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருக்க வேண்டும். கூட்டினார்களா.? கடந்த தேர்தலில் அ.தி.மு.க பெற்ற வாக்குகளை விட, நான்கு லட்சம் வாக்குகள் குறைவாக பெற்ற தி.மு.க., அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியது. டெபாசிட் இழந்தவர்கள், தேர்தல் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றவர்கள் என பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறதா என்பதே பெரும்பாலானோரின் கேள்வி. கடந்த காலங்களில் அ.தி.மு.க ஆட்சியை ஐ.சி.யூ,வில் படுத்திருக்கிறது என்று கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இப்போது அப்படி கூற முடியாத சூழல். அப்படி சொன்னால் அது வேறு மாதிரி திசை திருப்பப்படும்," என பேசி பரபரப்பை கிளப்பினார். அடுத்ததாக பேசிய துரைமுருகன், “உடல்நலம் பாதிக்கப்பட்டபோது முன்னாள் முதல்வர்கள் பலர் ஆட்சியை விட்டு சென்றுள்ளனர். தற்போது அ.தி.மு.க அரசு செயல்பாடு இல்லாமல் இருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். ஆனால், முதல்வர் நலமுடன் உள்ளார். அவர் தானே எழுந்து உணவு உண்ணுகிறார், பேசுகிறார் என்றெல்லாம் அ.தி.மு.கவினர் சொல்கிறார்கள். அப்படியென்றால் வேட்பாளருக்கு சின்னம் வழங்க ஏன் ரேகை உருட்டினார். அவருக்கே தெரியாமல் பல சொத்துக்களுக்கு ரேகை உருட்டப்படுகிறது. ஜெயலலிதா எழுந்து வந்தால், யார், யார் உள்ளே செல்வார்கள் என்பது தெரியும். இன்னும் ஆறு மாதத்தில் மக்களுக்காக பணியாற்றும் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடக்கும்," என்றார். இனிவரும் நாட்களில் தமிழக அரசியல் களம் இன்னும் பரபரக்கும்..
மட்டுமல்லாமல், தமிழக அரசியல் களமே பரபரத்துக்கிடக்கிறது. இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என சில கட்சிகளும், இதனால் அவர்கள் பயன்பட்டு விடக்கூடாது என சில கட்சியினரும் செயல்பட ஒட்டுமொத்த அரசியல் களமும் பரபரத்துக்கிடக்கிறது. தி.மு.க. அரசியல் நிகழ்வுகளில் மட்டுமல்லாது, திருமண விழாக்கள் போன்ற தனிப்பட்ட விழாக்களிலும் இந்த விவகாரம் தான் பேசப்பட்டு வருகிறது. தர்மபுரியில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி இல்லத் திருமண விழாவில், "கடந்த அ.தி.மு.க ஆட்சியை நான் ஐ.சி.யுவில் இருக்கிறது என்று விமர்சனம் செய்திருக்கிறேன். இப்போது அப்படி பேச முடியாத சூழல் நிலவுகிறது," என்று மு.க. ஸ்டாலின் பேச... "ஜெயலலிதாவுக்கு தெரியாமல் பல சொத்துக்களுக்கு ரேகை உருட்டப்படுகிறது," என துரைமுருகன் திரி கொளுத்த... இந்த விவகாரம் பரபரக்கிறது.
  எம்.புண்ணியமூர்த்தி    விகடன்,காம்

கருத்துகள் இல்லை: