திங்கள், 31 அக்டோபர், 2016

தொழில் துவங்க உகந்த மாநிலம்: 18 வது இடத்தில் தமிழகம்.. 2011 இல் மூன்றாவது இடத்தில் இருந்தது. அதிமுக வந்ததில் இருந்து ஒரே ரிவேர்ஸ் கியர்தாய்ன்

புதுடில்லி: தொழில் துவங்க உகந்த மாநிலம் தொடர்பான பட்டியலில், 12வது
இடத்தில் இருந்த தமிழகம் 18 வது இடத்திற்கு சரிந்துள்ளது. உலக வங்கி மற்றும் மத்திய வர்த்தக அமைச்சகம் சார்பில், இந்தியாவில் உள்ள மாநிலங்களிலன் தொழில் கொள்கை மற்றும் உலக வங்கியுடன் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில் துவங்குவதற்கான உகந்த மாநிலங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்த பட்டியலில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் பகிர்ந்து கொண்டுள்ளன. முதல் இடத்தில் இருந்த குஜராத் மாநிலம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நான்காவது இடத்தில் சத்தீஸ்கர், 5வது இடத்தில் மத்திய பிரதேசம், தொடர்ந்து அரியானா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும்ம காராஷ்விரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. 18 வது இடத்தில் தமிழகம் உள்ளது.
கர்நாடகா, உ.பி., மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் நம்பிக்கை அளிக்கும் மாநிலங்களாக உள்ளதாகவும், தமிழகம் டில்லி ஆகிய மாநிலங்கள் தொழில்துறையை மேலும் முடுக்கிவிடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தரவரிசை பட்டியல்: 01. ஆந்திரா மற்றும் தெலுங்கானா03. குஜராத்04. சத்தீஸ்கர்05. மத்திய பிரதேசம்06. அரியானா07. ஜார்க்கண்ட்08. ராஜஸ்தான்09. உத்தர்காண்ட்10. மகாராஷ்டிராதினமலர்.com

கருத்துகள் இல்லை: