இந்தியாவின் போபால் நகர மத்திய சிறையிலிருந்து, சிறைக்காவலர் ஒருவரைக் கொன்றுவிட்டு, படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தி சிறைச் சுவர்களில் ஏறித் தப்பிய 8 சிறைக் கைதிகளை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்த சிறைக்கைதிகள் , தடை செய்யப்பட்ட இஸ்லாமியவாதக் குழுவான, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை ( சிமி) சேர்ந்தவர்கள் , என்று காவல் துறையினர் கூறுகிறார்கள். இவர்கள் சிறைக்காவலரின் கழுத்தை அறுத்துவிட்டனர் என்றும் அவர்கள் கூறினர்.
தப்பியோடிய இவர்கள் அனைவரும் போபாலின் புற நகர்ப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போபாலின் தலைமை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் சௌத்ரி ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அவர்களை சரணடையச் சொன்னோம், ஆனால் அவர்கள் போலிஸ் முற்றுகை வளையத்தை ஊடுருவிச் செல்ல முயன்றனர், என்றார் அவர்.
இன்று ( திங்கட்கிழமை ) அதிகாலை இந்த சம்பவம் நடந்ததாக போபால் நகர மூத்த போலிஸ் அதிகாரி ராமா சிங் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மும்பையில் 2003ம் ஆண்டு நடந்த குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு இந்த இயக்கத்தினரே பொறுப்பு என்று இந்திய அரசு கூறியது. இத்தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். சிமி இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இதே போன்ற ஒரு சம்பவத்தில், மத்தியப் பிரதேசத்தில், 201ம் ஆண்டு, ஆறு சிமி இயக்க உறுப்பினர்கள் உட்பட 7 சிறைக்கைதிகள், சிறைக் கழிப்பறை சுவரை உடைத்தத்தப்பியோடினர். அவர்களில் ஒருவர் பின்னர் கண்ட்வா மாவட்டத்தின் சிறை அருகேயே கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக