செவ்வாய், 1 நவம்பர், 2016

வங்கதேசத்தில் 15 இந்து கோவில்கள் தாக்கப்பட்டன

டாக்கா : வங்கதேசத்தில் 15க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. : வங்கதேசத்திலுள்ள ஹரின்பெர் கிராமத்தை சேர்ந்த ரஸ்ராஜ் தாஸ் என்பவர் முஸ்லீம் மதத்தை அவமதிக்கும் வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை கண்டித்து நாசிர்நகரில் நூற்றுக்கணக்கான மதரசா மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வன்முறை வெடித்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் டயர்களை எரித்து போக்குவரத்தை தடை செய்தனர். கோயில்கள் சேதம்: நாசிக்நகரிலுள்ள 15க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், 100க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். பூசாரிகள் சிலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து நாசிர்நகர், மதப்பூர் உள்ளிட்ட பகுதியில் ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். தினமலர்.com

கருத்துகள் இல்லை: