வெள்ளி, 4 நவம்பர், 2016

கேரளம் .. கூட்டு பாலியல் பலாத்காரம்.. எவன் அதிக மகிழ்ச்சியை தந்தான் என்று கேட்ட போலிஸ் Which one gave you the greatest pleasure?

திருவனந்தபுரம்: பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை   விசாரணைக்கு சென்றபோது, அந்த பெண்ணை போலீசார் அவமானப்படுத்தும் வகையில் கேள்வி கேட்டுள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்த ஆண்களில் யார் அதிக இன்பத்தை கொடுத்தது எனக்கேட்டு அதிர்ச்சி அளித்தனர் .இதை பாக்கியலட்சுமி வைரலாக பரப்பினார். இது தொடர்பாக டிவியில் விவாதங்கள் கிளம்பின. தற்போது இப்பிரச்னை முதல்வர் விஜயன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
அவமானபடுத்தும் வகையில் கேரள போலீசார் கேள்வி கேட்டது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இரண்டு வருடத்திற்கு முன்னர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வந்த அவரது கணவரின் நண்பர்கள், அந்த பெண்ணை காரில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். . மலையாள அரசியல் எப்போதுமே வில்லங்கமான செயல்களுக்கு பெயர் போனது. நாங்கள் எல்லோரும் பரிசுத்தமானவன் என்று ஊருக்கு உபதேசம் செய்து விட்டு பெண்கள் விஷயத்தில் குளறுபடி செய்வதில் பலே கில்லாடிகள் .அதற்க்கு போலீஸ் உடந்தை
அந்த பெண் தனக்கு நேர்ந்த துயரம் குறித்து, சினிமா டப்பிங் கலைஞர் பாக்யலட்சுமி என்பவருக்கு பேஸ்புக் மூலம் பகிர்ந்துள்ளார். 

அவமானம்:

பாதிப்புக்கு உள்ளான பெண், கணவருடன் முகத்தை மூடியபடி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாலியல் பலாத்கார சம்பவத்தை விட போலீசாரின் அச்சுறுத்தல் மற்றும் அவமானப்படுத்தும் வகையில் கேட்கப்படும் கேள்வி தாங்க முடியாத வகையில் உள்ளது. போலீசார் தொடர்ச்சியாக என்னை விசாரணைக்கு அழைத்தனர். தினமும் காலை முதல் மாலை வரை போலீஸ் ஸ்டேசனில் அமர வைத்தனர். அங்கு என்னை அவமானப்படுத்தும் வகையில் கேள்விகளை கேட்டனர். நான் தினமும் போலீஸ் ஸ்டேசன் சென்று வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர், பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர். பின்னர் போலீசார் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். தொடர்ந்து கட்டாயமாக என்னை புகாரை வாபஸ் பெற வைத்தனர். ஒரு பேப்பரில் என்னிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கினர். ஆனால், அதில் என்ன இருந்தது என எனக்கு தெரியாது எனக்கூறினார்.

பொய் புகாராம்:

அந்த பெண் புகார் கூறிய நபர்களில் ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவுன்சிலராக உள்ளார். தன்னிடம் பணம் பறிக்கவே அந்த பெண் இவ்வாறு மிரட்டுவதாக கவுன்சிலர் கூறினா  மாலைமலர்.காம்

கருத்துகள் இல்லை: