சனி, 26 டிசம்பர், 2015

கோவில்களில் தாலிபான் பாணி உடைகட்டுப்பாடு ..RSS அஜெண்டாக்களை தமிழக அறநிலைய துறை நிறைவேற்ற துடிக்கிற.

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆனால் தமிழகத்தில் உள்ள சில ஆண் பக்தர்கள் கோயிலுக்கு வரும்போது டிரவுசர், டிராக் பேன்ட், பெண் பக்தர்கள் ஜீன்ஸ், டி சர்ட், டாப், லெக்கிங்ஸ் உள்ளிட்ட ஆடைகளில் வருகின்றனர்.இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்களில் ஒரு தரப்பினருக்கு சங்கடம் ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரை ட்ரவுசர், டிராக் பேன்ட், ஜீன்ஸ், லெக்கிங்ஸ்>அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று இந்து அறநிலையத்துறை அதிகாரிஒருவர் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள், ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில்  இந்து அறநிலையத்துறை தரப்பில் அனைத்து கோயில்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘‘திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் சம்பிரதாய உடைகள் அணிந்து வர வேண்டும்.கோயிலுக்கு வரும் பக்தர்கள் சம்பிரதாய உடைகள் அணிந்து வர வேண்டும். அதாவது ஆண்கள் வேட்டி, சட்டை, பைஜா குர்தா போன்ற உடைகளும், பெண்கள் புடவை, தாவணி அணிந்து வருவது கலாசாரமாகும். உடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பை கோயில் வளாகத்தில் வைக்க வேண்டும். பக்தர்கள்கட்டுப்பாட்டை மீறினால் அவர்களுக்கு உடை கட்டுப்பாடு தொடர்பாக அறிவுறுத்த வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: