சனி, 26 டிசம்பர், 2015

காரமாக facebook இல் பதிலடி...ரசிகரின் ஆபாச பதிவுக்கு நடிகை பூஜா ....

சென்னை: சிம்பு - அனிருத்தின் பீப் விவகாரம் அடங்கும் முன்பே, இன்னொரு ஆபாச சர்ச்சை. இது இரு நடிகைகள் தொடர்பானது. நடிகைகள் பூஜா, பார்வதி மேனன் ஆகிய இருவரும், தங்கள் உடல் அழகை ஆபாச வார்த்தைகளால் சமூக வலைத்தளத்தில் வர்ணித்த ரசிகர்கள் மீது 2 பேருக்கு ஆவேசமாக பாய்ந்து பதிலடி கொடுத்துள்ளனர். பூஜா, ‘நான் கடவுள்' படத்தில் நடித்து பிரபலமானவர். பார்வதி மேனன், ‘சென்னையில் ஒருநாள், மரியான், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பூஜா பூஜாவின் பேஸ்புக்கில் ரசிகர் ஒருவர் புகுந்து நீங்கள் பிங்க் நிற ஆடையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்று கருத்து பதிவிட்டு விட்டு தொடர்ந்து அவரது முன்னழகைப் பற்றி ஆபாசமாக எழுதியுள்ளார்.
கண்டிப்பு இதற்கு ஆவேசமாக மறுமொழி கூறியுள்ள பூஜா, "என்னை ஆபாசமாக வர்ணித்த உன்னை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். நாட்டில் செக்ஸ் குற்றங்கள் தினமும் நடக்கின்றன. கற்பழிப்பு சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் நடப்பதை பத்திரிகைகள், டெலிவிஷன்கள் மூலம் அறிகிறோம். அதுமதிரியான ஒரு கற்பழிப்பு குற்றவாளி போல் நீயும் ஆகிவிடக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன்.
நிறுத்து - திருந்து உன் கெட்ட செயல்களை நிறுத்திக்கொள். நீ நல்ல மனிதனாக திருந்துவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. நீ ஒரு பெண்ணிடம் இருந்துதான் வந்து இருக்கிறாய். அது உனது தாய். உனக்கு சகோதரியும் இருக்கலாம். அவளும் பெண்தான். பெண் நண்பர்களும் இருப்பார்கள். அவர்கள் உன்னை மதிக்கிற மாதிரி நடந்து கொள். உனக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கலாம் அல்லது ஏற்கனவே திருமணமான நபராகவும் இருக்கலா
பெண்களைக் காப்பாற்றும் கடமை மனைவியானவள் உனக்கு மரியாதை கொடுக்கிற மாதிரி நடந்து கொள். நீ ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகும் போது இந்த உலகத்தில் உள்ள ஆபத்தான ஓநாய்கள், பெண்களை சுற்றும் வக்கிரபுத்தி மனிதர்களிடம் இருந்து அவளை காப்பாற்ற வேண்டிய கடமையில் இருப்பாய். இதையெல்லாம் மனதில் வைத்து நல்லவனாக நடந்து கொள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
//tamil.filmibeat.com

கருத்துகள் இல்லை: