வியாழன், 24 டிசம்பர், 2015

கூட்டணி வியாபாரம் களை கட்டுகிறது : அருண் ஜெட்லி ஜெயலலிதாவை மறுபடியும் காப்பாற்றுவாரா ?

ஹலோ தலைவரே.. ..  போனவாரம் வெங்கையா நாயுடு வந்தாரு.. இந்த வாரம் அருண் ஜெட்லி வந்தாரு.'' 

""எல்லாமும் கூட்டணிக் கணக்குத்தானா?''

""தமிழகம், கேரளா, மேற்குவங்கம்னு அடுத்த வருடத்தில் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் வலுவா கால் ஊன்றணும்ங்கிறது மோடி- அமித்ஷாவோட கணக்கு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் ஒரு ராஜ்யசபா சீட் வாங்குற அளவுக்கு சட்டமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு எம்.எல்.ஏ.க்கள் வேணும்னு நினைக்கிறாங்க. அந்தக் கணக்கோடுதான் அவங்க அ.தி.மு.க தலைமையை அப்ரோச் பண்ணுறாங்க.'அப்படின்னா 35 சீட்டுக்குக் குறையாம ஜெயிக்கணுமே, அந்தளவுக்கு பா.ஜ.க.வுக்கு ஜெ. சீட் கொடுப்பாரா என்ன?'வெள்ளநிவாரணத்துக்கு மத்திய அரசின் நிதி உதவி ஜெ.வுக்குத் தேவை. அதோடு சொத்துக்குவிப்பு அப்பீல் கேஸிலும் சட்ட உதவி தேவை. அதனால ஜெ இறங்கி வருவார்ங்கிறது பா.ஜ.க மேலிடத்தோட கணக்கு. நிவாரணப் பணத்தை நாமதான் கொடுக்குறோம்ங்கிறதை தமிழக மக்கள் உணரணும்னும் மோடி அறிவுறுத்தியிருப்பதோடு, மத்திய அமைச்சர்களையும் தொடர்ந்து தமிழகத்துக்கு அனுப்பி வைக்கிறாரு. ஆனா வெள்ள நிவாரணத்தை வச்சி, அ.தி. மு.க.வோடு கூட்டணின்னு பா.ஜ.க போட்ட கணக்கு ஒர்க் அவுட் ஆகலை.''

""ஜெ.வோட ரிப்ளை என்னவாம்?''

""கார்டனில்தான் ஜெ.வை வெங்கையா நாயுடு சந்திப்பதா இருந்தது.  ஆனா, கூட்டணிப் பேச்சுக்கு இடம்தரக் கூடாதுன்னு தலைமைச் செய லகத்தில் சந்திப்பை நடத்தினார் ஜெ. அதுபோல ஜெ.வின் அரசியல் நண்பரான அருண் ஜெட்லி சென்னை வந்ததே, சொத்துக் குவிப்பு  அப்பீல் வழக்கு பற்றிப் பேசி, கூட் டணியையும் உறுதிப்படுத்த லாம்ங்கிற கணக்கோடுதான். அது வெளியே தெரியக் கூடாதுன்னுதான் அவர் பங்கேற்கிற, வங்கி கடன்உதவி விழா ஒன்றையும் ஏற்பாடு செஞ்சாங்க.'' 

""ஜெ-ஜெட்லி சந்திப்பு கூட கோட்டையிலதானே நடந்தது?''

""ஆனா சென்னைக்கு வர்றதுக்கு முன்னாடியே போனில் இரண்டு பேரும் பேசிட்டாங்கன்னு இரண்டு கட்சிகளிலிருந்தும் சொல்றாங்க. சுப்ரீம் கோர்ட் வழக்கு, மத்திய அரசின் வெள்ளநிவாரண உதவி பற்றியெல்லாம் பேசப்பட் டாலும், கூட்டணி விஷயத்தில் ஜெ. மறுத்துட்டாராம். அதனால ஜெட்லி சென்னைக்கு வந்தப்ப வெள்ளநிவாரணம் பற்றியும், நாடாளுமன்றத்தில் நிறை வேறவேண்டிய மசோதாக்கள் பற்றியும் பேசப்பட்டிருக்குது. கூட்டணி இல்லைன்னாலும் நட்புமுறையில் மோடியும் ஜெட்லியும் தனக்கு பக்கபலமா இருப்பாங்கன்னு ஜெ. உறுதியா நம்புறாரு.''


""அ.தி.மு.க கதவு திறக் காதுன்னு பா.ஜ.க மேலிடத்துக்கு தெரிஞ்சதாலதான் ஜெட்லி வர்றதுக்கு முன்னாடியே தமிழக பா.ஜ.க.வினர் விஜயகாந்த்தை சந்திச்சாங்களா?''

""அவரை சந்திக்கிறதுக்கு முதல்நாளே பிரேமலதாவை தமிழிசை சவுந்திரராஜன் சந்திச் சிப் பேசிட்டாரு. 18-ந் தேதி நைட் 8 மணிக்கு சாலிகிராமம் வீட்டுக்கு தமிழிசை வந்ததும், விஜயகாந்த்கிட்டே பிரேமலதா தகவல் சொல்ல, என்னை சந்திக்க ணும்னா ஆபீசுக்கு வரட்டும். இப்ப நீயே பேசிடுன்னு சொல்லிட்டா ராம். கூட்டணியில் முதல் மரி யாதை, ராஜ்யசபா எம்.பி., மத் திய மந்திரி பதவி என்றெல்லாம் தமிழிசை சொல்லியிருக்காரு. பிரேமலதாவோ, நாளைக்கு கேப்டனை சந்திச்சிப் பேசுங்கன்னு சொல் லிட்டாரு. மறுநாள் மதியம் 12.45 மணிக்கு பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, மோகன்ராஜுலு மூணுபேரும் தே.மு.தி.க ஆபீசுக்குப் போக, அப்பதான் தே.மு.தி.க நிர்வாகிகளுக்கே விஷயம் தெரிஞ்சிருக்குது.''


""விஜயகாந்த்தோடு பா.ஜ.க தலைவர்களின் சந்திப்பு எப்படியாம்?''

""எடுத்த எடுப்பிலேயே நக்கலும் கோபமுமா விஜயகாந்த் விளாசி யிருக்காரு. கூட்டணிக்கட்சின்னு இப்ப என்னைத் தேடி வர்றீங்க, ஆனா இத்தனை நாளா போயஸ்கார்டனுக்கு மட்டும்தான் உங்களுக் கும் டெல்லி ஆட்களுக்கும் வழி தெரிஞ்சுது. வெள்ளத்தைப் பார்வை யிட பிரதமர் வந்தப்பக்கூட எனக்கு அப்பாயிண்ட்மெண்ட் இல்லை. நான் என்ன உங்க கூட்டணிக்கு ஸ்டெப்னி டயரான்னு விஜயகாந்த் கேட்டிருக்காரு. அவரை சமாதானப்படுத்துறதா நினைச்சி, அருண் ஜெட்லி வர்றப்ப நீங்க சந்திக்கலாம்னு பா.ஜ.க தலைவர்கள் சொல்ல, அவர் கார்டனுக்குப் போவாரு, நானும் அங்கே வந்து காத்திருக் கணுமா, யாரா இருந்தாலும் என் ஆபீசில்தான் சந்திப்பேன்னு சொல்லிட்டாராம். வைகோ, ராமதாஸ், ஜி.கே.வாசன் எல்லோருடனும் பேச்சு நடக்குதுன்னு பா.ஜ.க தலைவர்கள் சொல்லியிருக்காங்க.''

""பா.ம.க அன்புமணியையும் சந்திச்சிருக்காங்களே?''

""இந்த சந்திப்பில், சி.பி.ஐ விசாரணையில் உள்ள மெடிக்கல் காலேஜ் விவகாரம் பற்றி பா.ஜ.க தரப்பில் பேசியிருக்காங்க. முதல்வர் வேட்பாளர்ங்கிறதை அன்புமணி விட்டுக்கொடுத்ததா செய்திகள் பரவ, அதை பா.ம.க உடனடியா மறுத்திடிச்சி.  அன்புமணியுடனான சந்திப்புக்குப்பிறகு தமிழிசை மட்டும் விஜயகாந்த் வீட்டுக்குப் போய் அவர்கிட்டேயும் பிரேமலதாகிட்டேயும் ஒரு மணி நேரம் பேசியிருக் காரு. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டேன். எனக்கு ஜெ.வைத்தவிர வேறு யாரும் எதிரியில்லைன்னு சொல்லி அனுப் பிட்டாராம். மக்கள்நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் வருவாருன்னு வைகோ ரொம்ப நம்பிக்கையோடு ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருக்காரு. வாசனும் வருவாருன்னு சொன்னவர், ம.தி.மு.க.வை விட்டு போறவங்க போகட்டும். எனக்கு கவலை இல்லை. அவங்களால சேதாரமும் இல்லை. அ.தி.மு.கவோட வெள்ள நிவாரணத் தவறு களால தி.மு.க லாபமடையாம நாம தடுக்கணும்னு பேசியிருக்காரு.''


""அரசியல் களத்தில் அ.தி.மு.கவைவிட தி.மு.கவுக்குத்தான் செம எதிர்ப்பு நிலவுது. அறிவாலயம் எப்படி இதை எதிர்கொள்ளப் போகுதாம்?''

""தேர்தல் நெருங்கும் வரைக்கும் அரசியல் களம் இப்படித் தான் இருக்கும்னு நினைக்கிற தி.மு.க., மக்கள் பிரச்சினைகளில் சென்ட்டிமென்ட்டான அணுகுமுறைகளை கையாண்டுக்கிட்டிருக் குது. தடை செய்யப்பட்டிருக்கிற வீரவிளை யாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய-மாநில அரசுகள் ஆவன செய்ய வலியுறுத்தி, 28-ந் தேதி ஸ்டாலின் தலைமையில் அலங்காநல்லூரில உண்ணா விரதப் போராட்டம் நடத்துவதுன்னு ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்புகள் கலைஞரை சந்திச்சப்ப முடிவாகியிருக்குது.'' 

""வெள்ள நிவாரணம் பற்றி எதிர்பார்ப்பு ஒரு பக்கமும் அதிருப்தி மறுபக்கமும் வந்துக் கிட்டிருக்குதே, ஜெ.வோட திட்டம் என்ன?''

""அவரோட பதட்டமான எதிர் பார்ப்பு சுப்ரீம்கோர்ட்டில் உள்ள அப்பீல் வழக்குன்னு டெல்லி வட்டாரம் என் கிட்டே சொல்லுது. காஷ்மீர்காரரான தலைமை நீதிபதி தாக்கூரோட அப்பா அந்த மாநிலத்தில் அமைச்சரா இருந்த காங்கிரஸ்காரர். ஜெட்லியின் மாமனாரும் அதே மாநிலத்தில் சபாநாயகரா இருந்த காங்கிரஸ்காரர். இரு குடும்பமும் நல்ல நட்புமுறையில் உள்ளது. இந்த விவரத்தைக் கூடவிடாமல் சேகரித்தபடி அ.தி.மு.க வக்கீல் கள் டெல்லியில் தீவிரமா வேலை பார்த்துக் கிட்டிருக்காங்க. சுப்ரீம்கோர்ட்டில் ஜனவரி மாசம் சொத் துக் குவிப்பு அப்பீல் வழக்கு விசாரணைக்கு வருது. அதன் போக்கைக் கவனிச்சிட்டு மற்ற விஷயங்களை கவனிப்போம்ங்கிறது ஜெ.வோட வியூகமாம்.''   nakkheeran,in

கருத்துகள் இல்லை: