செவ்வாய், 22 டிசம்பர், 2015

மாநிலங்கள் அவையில் சிறார் குற்ற சட்டம் நிறைவேறியது . ராகுல்காந்தியிடம்...ஜோதி சிங்கின் பெற்றோர்

பிந்திய செய்தி:  மாநிலங்கள் அவையில் சிறார் தண்டனை மசோதா நிறைவேறியது, Under the new law, those in 16-18 age group will be be examined by Juvenile Justice Board to assess if crime was committed as child or adult.:மாநிலங்களவையில், சிறார் சட்ட திருத்த மசோதா மீது இன்று நடைபெற்று வரும் நிலையில், அவை நடவடிக்கைகளை கவனிக்க நிர்பயா பெற்றோர் மாநிலங்களவைக்கு வருகை தந்துள்ளனர். சிறார் சட்டத்தில் திருத்தம் செய்வதின் மூலம், கொடூர குற்றங்கள் புரியும் 16-18 வயதுடையவர்களை வயது வந்தவர்களாக கருதி விசாரணை நடத்த முடியும்.
முன்னதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை இன்று டெல்லியில் நிர்பயாவின் குடும்பத்தினர் சந்தித்து பேசினார். அப்போது, மாநிலங்களவையில் சிறார் சட்ட திருத்த மசோதா நிறைவேற காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த சந்திப்பு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, மாநிலங்களவையில், சிறார் சட்ட திருத்த மசோதாவில் நிறைவேற தனது கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று ராகுல் காந்தி கூறியதாக தெரிவித்தார் nakkheeran,in

கருத்துகள் இல்லை: