செவ்வாய், 22 டிசம்பர், 2015

சென்னை விமான நிலைய கூத்து...சாரா வில்லியம்சுக்ககாக சாரா தாமசை சிறையில்...இரண்டு லட்சம் அபராதம்

சென்னை விமான நிலையத்தில் பெண் ஒருவர் தவறுதலாக கைது செய்யப்பட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுக்ளுக்கு ரூபாய் இரண்டு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாரா வில்லியம்ஸ். வழக்கு ஒன்றில் தலைமறைவாக இருந்த இவர், கேரள மாநில சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய சேலையூரைச் சேர்ந்த சாரா தாமஸ் என்பவர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாரா தாமஸ் தவறுதலாக கைது செய்யப்பட்டதாக கூறி விடுவிக்கப்பட்டார்.
சாரா தாமதஸ் தவறுதலாக கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவரது மகன் கெவின் ஜான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் அடங்கிய அமர்வு, பாஸ்போர்ட்டை சரியாக பரிசோதிக்காத அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தொகையினை தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.nakkheeran,in

கருத்துகள் இல்லை: