புதன், 23 டிசம்பர், 2015

கலைஞர் பதில் :தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும்

சென்னை: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என்று விரும்புவதாக தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று அழைப்பு விடுத்துள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அண்மையில் பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து பேசியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் முத்தரசன் ஆகியோர் விஜயகாந்த்தை சந்தித்தனர். அப்போது மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க. இணைய வேண்டும் என்று அவர்கள் விஜயகாந்த்திடம் வலியுறுத்தினர். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் இந்த சந்திப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. Karunanidhi invites Vijayakanth to join DMK alliance விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் சந்தித்தது பற்றி நான் கருத்து எதுவும் கூற முடியாது என்றார். மேலும் தி.மு.க. தரப்பில் இருந்தும் விஜயகாந்த்தை சந்திப்பது ஆலோசனைகள் நடத்தப்பட்டதா? என்ற கேள்விக்கு, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார் கருணாநிதி. இந்த பதிலை தே.மு.தி.க.வுக்கான தி.மு.க.வின் அழைப்பாக எடுத்து கொள்ளலாமா என்ற மற்றொரு கேள்வி, நான் தெரிவித்த கருத்தே அழைப்புதானே என்றார். அத்துடன் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி 75% முடிவடைந்துவிட்டதாகவும் கருணாநிதி கூறினார். பொதுக்கூட்டங்களில் தி.மு.க. இறங்கி வந்து கூட்டணி குறித்து பேச வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசிவரும் நிலையில் கருணாநிதியின் இந்த அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. //tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: