வெள்ளி, 25 டிசம்பர், 2015

உலக அழகியாக இராக் பெண் தெரிவு 40 வருடங்களின் பின்பு.....


பாக்தாத்,டிச.25 (டி.என்.எஸ்) ஈராக்கில் சமீபத்தில் நடந்த அழகிப் போட்டியில்
ஷாய்மா குயாசிம் அப்துல் ரகுமான் என்ற 20 வயது பெண் ‘மிஸ் ஈராக்’ பட்டம் வென்றார். இந்த நிலையில், அவருக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களது இயக்கத்தில் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். இல்லையெனில் அவரை கடத்திவிடுவோம், என்று மிரட்டல் விடுத்துள்ளனர். செய்தி நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து அழகி ஷாய்மா கூறுகையில், “ஈராக் பெண்ணாகிய நான் எனது சமூகத்தில்தான் வாழ்கிறேன். ஆண்கள் போன்று பெண்களுக்கும் வாழ உரிமை உள்ளது என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். மிரட்டலுக்கு நான் பயப்படவில்லை. ஏனெனில் நான் எந்த தவறும் செய்யவில்லை’’ என நம்புகிறேன்.
கடந்த 1972ஆம் ஆண்டிற்கு பிறகு 43 ஆண்டுகளுக்கு பிறகு ஈராக்கில் நடைபெற்றுள்ள இந்த அழகிப் போட்டியில் பங்கேற்க 200 பேர் பதிவு செய்திருந்தனர். ஆனால் தீவிரவாதிகளின் கொலை மிரட்டலை தொடர்ந்து, ஏராளமானோர் போட்டியில் இருந்து விலகினார்கள். இறுதியாக 10 பேர் மட்டுமே போட்டியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது  /chennaionline.com/

கருத்துகள் இல்லை: