வெள்ளி, 25 டிசம்பர், 2015

சென்னை வெள்ளத்தில் 5000 கிளிகளுக்கு புகலிடம் தந்த ஜோசெப் சேகர்....பறவை மனிதர்


சென்னை: பறவை மனிதன் என்று இவருக்குச் செல்லப் பெயர் உண்டு. சமீபத்திய சென்னை வெள்ளத்தின்போது இவரது வீடு பறவைகளுக்கான நிவாரண முகாமாக மாறிப் போயிருந்தது.
ஜோசப் சேகரின் வீடு முழுக்க கிளிகள் குவிந்திருக்க அந்தப் பகுதியே கீச் கீச் சத்தத்தால் திக்குமுக்காடிப் போனது. வழக்கமாகவே இவரது வீட்டுக்கு ஏகப்பட்ட கிளிகள் தினசரி வருமாம். இரை உண்ணவும், ஓய்வெடுக்கவும் ஜோசப் சேகரின் வீடுதான் இந்த கிளிகளுக்கு விருப்ப இடமாக விளங்குகிறது.
இந்த நிலையில் சமீபத்திய மழை வெள்ளம் பல ஆயிரம் கிளிகளை ஜோசப் சேகரின் வீடு தேடி வர வைத்து விட்டது. இதுகுறித்து தி நியூமிஸ்மினிட் போட்டுள்ள ஒரு சுவாரஸ்ய செய்தி
10 நாட்கள் தஞ்சமடைந்த கிளிகள் "வெள்ளம் பாதித்த அந்த பத்து நாட்களும் எனது வீடு ஒரு நிவாரண முகாம் போலவே இருந்தது. காலையில் வந்தால் மாலை வரை எனது வீட்டிலேயே இருக்கும் இந்தக் கிளிகள்

5000 கிளிகள் கிட்டத்தட்ட 5000 கிளிகள் வரை எனது வீட்டின் மாடி உள்ளிட்ட பகுதிகளில் அடைக்கலம் புகுந்திருந்தன. வழக்கமான நாட்களில் கிட்டத்தட்ட 3000 கிளிகள் வரை கூடியிருக்கும்
தவறாமல் போய்.. மறக்காமல் திரும்பி வரும் மாலைக்கு மேல் அத்தனையும் போய் விடும். எங்கு போகும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அடுத்த நாள் காலை தவறாமல் வந்து விடும் என்றார் சேகர். ராயப்பேட்டையில் ஒரு கேமரா ரிப்பேர் கடை நடத்தி வருகிறார் சேகர்
வெள்ளத்திலும் விடாத அன்பு வெள்ளத்தில் சேகரின் வீடும் தப்பவில்லை. அவரது வீட்டுக்குள்ளும் முழங்கால் வரைக்கும் தண்ணீர் வந்தது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் ரெயின்கோட் போட்டுக் கொண்டு தினசரி மாடிக்குப் போய் விடுவாராம் சேகர்
தினசரி காலையும், மாலையும் கிளிகளுக்கு இரை வைத்து விட்டு வருவாராம். மழைக்காகவோ வெள்ளத்துக்காவோ இதைச் செய்யத் தவறியதில்லையாம் அவர்
சாதாரண நாட்களில் நான் மாடியை தினசரி 2 வேளை சுத்தம் செய்வேன். ஆனால் மழை நாட்களில் கிளிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் தினசரி 5 வேளை பெருக்கும் நிலை ஏற்பட்டது" என்றார் சேகர்
10 நாட்களுக்கு ஸ்டாக் இருக்கும் தினசரி கிளிகளுக்கு இரை போட தேவையானதை எப்போதுமே ஸ்டாக் வைத்திருப்பாராம் அவர். குறைந்தது 10 நாட்கள் வரைக்குமான தீனியை அவர் ஸ்டாக் வைத்திருப்பாராம். எனவேதான் வெள்ள பாதிப்பின்போது அவருக்கு இரைக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லையாம்.
2004ம் ஆண்டு சென்னையை சுனாமி தாக்கியபோதுதான் முதல் முறையாக பறவைகள் மீது காதல் பிறந்துள்ளது சேகருக்கு. அப்போது அவரது கடைக்கு சுனாமிக்கு அடுத்த சில நாட்களில் இரண்டு பறவைகள் வந்துள்ளன. அதற்குத் தீனி போட்டுள்ளார் சேகர். அது அப்படியே பழக்கமாகி விட பறவைகளின் எண்ணிக்கையும் கூடி விட்டதாம்.
சுனாமிக்குப் பிறகு சென்னை சந்தித்த மிகப் பெரிய பேரிடர் இந்த வெள்ளம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பும் கூட இந்த அளவுக்குப் பறவைகள் சேகர் வீட்டைத் தேடி வந்துள்ளது என்ற போதிலும் இப்போதுதான் மிகப் பெரிய அளவில் வந்ததாக அவர் கூறுகிறார். பாராட்டுக்குரியவர்தான் ஜோசப். //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: