திங்கள், 21 டிசம்பர், 2015

கரகாட்டகாரி தமிழிசை சவுந்தரராஜன் விவகாரம் ..இளங்கோவன் மீது புகார் ...மாதர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை அவதூறாக பேசியதற்காக, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர், கமிஷனர் ஆபீசில் புகார் மனு அளித்தனர். பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை கரகாட்டக்காரி, பொய்க்கால் குதிரையாட்டக்காரி என்று பொருள்பட பேசியிருந்தார் இளங்கோவன். பொய்க்கால் குதிரையாட்டக்காரி என்று பொருள்பட பேசியிருந்தார்
இளங்கோவன். Women organization filed police complaint against EVKS Elangovan இதை கண்டித்து, தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பாக சென்னை மாநகரகக் காவல்துறை அலுவலகத்தில் புகார் மனு இன்று வழங்கப்பட்டது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை அவதூறாகப் பேசியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இளங்கோவன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது  Read more at: //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: