ஞாயிறு, 20 டிசம்பர், 2015

பவானி சாகர் அணையில் இருந்து அம்மாவின் ஆணைப்படி இன்று தண்ணீர்....என்ஜினீயர்கள் ஆணைப்படி அல்ல ...

சென்னை : பவானி சாகர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை - ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை,தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால்களின் பழைய ஆயக்கட்டுபகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறுவேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர்அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால்களின் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டாம் போகபாசனத்திற்கு இன்று 20.12.2015 முதல் தண்ணீர் திறந்துவிட நான்ஆணையிட்டுள்ளேன். இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம்,அந்தியூர், பவானி மற்றும் ஈரோடு வட்டங்களில் உள்ள 40,247 ஏக்கர்நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன்தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தினமலர்.com

கருத்துகள் இல்லை: