வியாழன், 24 டிசம்பர், 2015

பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஏற்படலாம்..மோடி புடின் சந்திப்பு

ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், கிரெம்ளின் மாளிகையில் தனிப்பட்ட இரவு விருந்துபசாரம் ஒன்றை அளித்துள்ளார். ரஷ்யப் பிரதமருடனான பேச்சுக்கள் 'பலனுள்ளவையாக' இருந்ததாக நரேந்திர மோடி அவரது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

வணிகத்துறை பிரதிநிதிகளுடனான சந்திப்புடன் நரேந்திர மோடியின் ரஷ்ய விஜயம் அதிகாரபூர்வமாக இன்று துவங்கியது.
அதிபர் புடினுடனான உத்தியோகபூர்வ பேச்சுக்களையும் மோடி இன்று நடத்தினார்.
பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மோடியின் இந்தப் பயணத்தின்போது கையொப்பமாகும் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இந்த ஒப்பந்தங்களில் பல பாதுகாப்புத் துறை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.bbc,தமிழ்.com

கருத்துகள் இல்லை: