வியாழன், 24 டிசம்பர், 2015

சிம்புவின் அம்மா உஷா கண்ணீர்....தமிழ்நாடே வேண்டாம் எங்காவது போகிறோம்


சிம்புவின் ஆபாச பாடல் விவகாரம் பெண்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்திருக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் இந்த பிரச்சனையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர், சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் 17 நிமிடம் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உருக்கமாக பேசி இருந்தார். அதில், சிம்புவின் பாடல் தமிழக பெண்களின் மனதை நெருடி இருந்தால், அந்த களங்கத்தை கண்ணீரால் துடைக்க விரும்புகிறேன் என்று உருக்கமாக பேசி இருந்தார். இந்த நிலையில் சிம்புவின் தாய் உஷா, கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ள வீடியோ ஒன்று இன்று வாட்ஸ்–அப்பில் வெளியானது. அதில் உஷா கூறியிருப்பதாவது:– என் மகன் செய்ததை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. நான் ஒப்படைக்கிறேன் என் பையனை. அப்படி என்ன தப்பு செய்து விட்டார் சிலம்பரசன். 24 மணி நேரமும் கேமராவோட வீட்டு வாசலில் உட்கார்ந்தா எங்களுக்கு என்ன நிம்மதி இருக்கு. எங்கள் வீட்டில் நிம்மதி இல்லை. வீட்டுக்கு வெளியில் வந்து கோலம்கூட போட முடியவில்லை.  பணக்கார வீடுகளில்  பிள்ளைகளை  தறுதலைகளாக வளர்த்துவிட்டு  பின்பு சமுகத்தை குற்றம் சொல்லும் பெற்றோர்கள் தண்டிக்க படவேண்டியவர்கள்தான்


சிலம்பரசனை தூக்கில் போட வேண்டும் என்கிறார் ஒருவர். என்னங்க பிரச்சனை உங்களுக்கு அப்படி என்னங்க அவரு தப்பு பண்ணி விட்டார். அவர் நண்பர்களிடம் வீட்டுக்குள்ளே விளையாட்டாக பாடிய பாட்டு. அதை சினிமாவில் பாடினாரா? அல்லது அவர் வெளியிட்டாரா? வார்த்தைகளை மறைத்து வேண்டாம் என்று தூக்கி எறிந்த பாடல். அதை யாரோ திருடி வெளியிட்டுள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை இல்லை.

சிம்புவை போலீஸ் தேடுகிறது. சிம்புவை போலீஸ் தேடுகிறது என்று தினமும் செய்திகள் வருகின்றன. எந்த போலீஸ்கிட்டங்க அவரை ஒப்படைக்கணும் நான் ஒப்படைக்கிறேன். நீங்களே வச்சுக்குங்க. அவரையே கார்னர் பண்றாங்க. சிம்புவை தண்டிக்க நினைத்தால அவரைப் பெற்ற என்னை தண்டியுங்கள். சிம்புவோட உயிர் வேண்டுமா? இல்லை இந்த தாயோட உயிர் வேண்டுமா? என்னோட உயிரை எடுத்துக்கோங்க.. என்னை தூக்கில் போடுங்கள்

என்னங்க ஊரு இது. தமிழ்நாடே வேண்டாம். கேரளா, கர்நாடகா என்று குடும்பத்தோட எங்காவது சென்று பிழைத்துக் கொள்கிறோம். எங்களை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நன்றி.

இவ்வாறு பேசியுள்ள உஷாவின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறது. அதனை துடைத்துக்கொண்டே அவர் பேசுவது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை: