வியாழன், 24 டிசம்பர், 2015

அனுஷ்காவுக்கு இஞ்சி இடுப்பழகியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை....அழகாகவே..

கமல் படத்தின் மூலம் பாப்புலர் ஆன ‘இஞ்சி இடுப்பழகி’ வார்த்தை தங்கள் படத்தையும் பாப்புலராக்கும் என்று டைட்டில் வைத்ததாக இயக்குனரே சொல்லியிருந்தாலும், அனுஷ்காவின் இடுப்பை பார்த்த பிறகு தான் இந்த டைட்டிலை வைத்தாரோ எனத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட 70 கிலோ இருப்பார் அனுஷ்கா. ஆனாலும் அந்த இடை வளைவும், பொலிவான தோற்றமும், அழகு பேசும் கண்களும் மாறவே இல்லை.
 இரவு பார்த்து பெருமைப்பட்டுக்கொண்டு உறங்கிய முகத்தில் காலையில் ஒரு முகப்பரு தோன்றினால் எவ்வளவு அதிர்ச்சியடைவோமோ, அவ்வளவு அதிர்ச்சியை தருகிறார் புடவையில் பாதி ஸ்கிரீனை மறைத்துக்கொண்டு வரும் அனுஷ்கா. இவரது கதாபாத்திரத்தை மாதிரியான பெண்களை நாம் பெரும்பாலும் காணலாம். ஆனால் குண்டாக இருக்கிறோம் என்பதை குறையாக நினைக்காதபடி மகிழ்ச்சியுடன் அப்பாவால் வளர்க்கப்படுகிறார்


அனுஷ்கா. காலத்தின் கட்டாயத்தில் அப்பா பிரிந்துவிட, அம்மாவால் வளர்க்கப்படுகிறார். திருமண வயது வரை மகள் குண்டாக இருப்பதை குறையாக என்னாத ஊர்வசிக்கு திருமணப் பேச்சுக்கள் தட்டிப்போக அது ஒரு குறையாக தெரிகிறது. அனுஷ்கா அடாவடித்தனத்தால் ஊர்வசி எதிர்பார்த்த எல்லா தகுதிகளும் உடைய ஆர்யாவை வேண்டாம் என்று சொல்லும்போது அனுஷ்காவே ஒரு குறையாக தெரிகிறார். பெண்பார்க்க வந்த ஆர்யாவை பல இடங்களில் தற்செயலாக சந்திக்க, பிறகு அதுவே திட்டமிட்டு தொடர அனுஷ்காவிற்குள் எக்ஸ்ட்ரா சைஸ் பீட்சா அளவுக்கு காதல் மலர்கிறது.

அனுஷ்கா-ஆர்யா இடையே விவரிக்க முடியாத ஏதோ ஒரு மெல்லுணர்வு இழையோட நண்பர்களாய் தொடர்கின்றனர். அந்த சமயம் அனுஷ்காவிற்கு எதிர்பதமாக, அதாவது ஒல்லியாக... செக்ஸியாக... ஆர்யாவின் தோழியாக வரும் சோனல்(கதைப்படி வரும் பெயரான சிம்ரன் என்றே அழைப்போம்) ஆர்யாவை காதலிக்கிறார். ஆர்யாவும் தனிமையிலிருக்கும் சிம்ரனுக்கு இதழ்மூலம் ஆதரவு தர, அனுஷ்கா இதை பார்த்துவிடுகிறார்.

இத்தனை வருடங்களாக தனது உடலமைப்பை பற்றி கவலைப்படாத அனுஷ்கா முதல்முறையாக வெடித்து அழுகிறார். ஆர்யா அனுஷ்காவின் உடல்பற்றி எந்த குறையும் கூறவில்லையென்றாலும் அடிபட்ட மனது எதையும் தனக்கு நேர்மாறாக யோசித்து நொந்துகொள்கிறது. இதயத்தில் பட்ட அடியின் வலியால் துடிக்கும் அனுஷ்காவிற்கு மேலும் ஒரு அடியாக விழுகிறது, அவரது தோழி பவனி கவலைக்கிடமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல்.

மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொள்ள உடல் எடையை குறைக்க ‘சைஸ் ஜீரோ’ என்ற தனியார் ஃபிட்னஸ் செண்டரில் சேர்ந்த பவனி, அங்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் காரணமாக கிட்னியை இழந்துவிட்டதாக சொல்ல அவருக்கு நியாயம் கேட்டு புறப்படுகிறார் அனுஷ்கா. அவருக்கு உதவ வருகிறார்கள் ஆர்யாவும், சிம்ரனும். அனுஷ்கா ஒல்லி ஆனாரா? இல்லையா? படத்துல பாருங்க சார். nakkheeran,in
கருத்துகள் இல்லை: