செவ்வாய், 22 டிசம்பர், 2015

10 லட்சம் ..அகதிகள் போர்வையில் இஸ்லாமிய....ஐரோப்பிய மக்கள் விசனம்


கடல் வழியாகவும், தரை மூலமாகவும் ஐரோப்பாவுக்குள் நுழைந்த குடியேறிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டிவிட்டதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு ( ஐ.ஓ.எம்) கூறியுள்ளது. Image caption ஐரோப்பா வந்த குடியேறிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது இது கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். இதில் பெருமளவிலானோர் கடல் மார்க்கமாகவே வந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானோர் துருக்கியில் இருந்து கிரேக்கத்துக்கு கடல் வழியாக வந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகளாவர். 3695 பேர் கடலில் மூழ்கியுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் ஐ.ஓ.எம் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த திங்களன்று எட்டப்பட்டதாகவும், கடல் மற்றும் தரை மார்க்கமாக வந்தவர்களின் எண்ணிக்கை 1,005,504 ஆகும் என்றும் அது கூறுகின்றது. கிரேக்கம், பல்கேரியா, இத்தாலி, ஸ்பெயின், மால்டா மற்றும் சைப்பிரஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் ஊடாக வந்தவர்களே இவர்களாவர். 455,000 பேர் சிரியாவைச் சேர்ந்த அகதிகள், 186,000 க்கும் அதிகமானோர் ஆப்கானில் இருந்து வந்துள்ளனர். bbc.தமிழ்.com

கருத்துகள் இல்லை: