வெள்ளி, 25 டிசம்பர், 2015

பாகிஸ்தானுக்கு நரேந்திர மோடி திடீர் விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கான தனது முதலாவது
பயணத்தை இன்று மேற்கொண்டுள்ளார். முன்னறிவிப்பில்லாத திடீர் விஜயமாக பாகிஸ்தானின் லாஹூர் நகருக்கு அவர் சென்றுள்ளார்.
இந்த திடீர் விஜயம் தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்ட அவர், பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷரிப்பை இன்று மதியம் லாகூரில் சந்திக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நவாஸ் ஷரிப்புக்கு தான் வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார். 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் பாகிஸ்தானின் லாஹோர் நகருக்கு செல்லவிருப்பதாக தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி இந்தியா திரும்பும் முன்பு பாகிஸ்தான் செல்கிறார். வரலாறு முக்கியம் அமைச்சரே ....அதைவிட விளம்பரம் ரொம்ப முக்கியம் அமைச்சரே

அணு ஆயுத வல்லமை கொண்ட இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையில் அமைதி பேச்சுக்களை மீண்டும் தொடங்கும் முயற்சியாக, கடந்த மாதம் பாரிஸில் நடந்த பருவநிலை மாற்றம் பேச்சுக்களில், இவ்விரு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
2004ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு இந்திய பிரதமர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.bbc.tamil.com

கருத்துகள் இல்லை: