ஞாயிறு, 2 நவம்பர், 2014

நடிகர்களின் முதல்வர் கமல்ஹாசன்: திருச்சியில் போஸ்டர்! சபாஷ் சரியான போட்டி?

திருச்சி: கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி திருச்சியில் அவரது ரசிகர்கள் ஒட்டிய ஒரு போஸ்டர் அங்கு பரபரப்பை கிளப்பியுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள், நவம்பர் 7 ஆம் தேதிதான் என்றாலும், திருச்சியில் மட்டும் சில நாட்களுக்கு முன்னரே அவரது  பிறந்தநாள் விழா களைகட்டிவிடும். வருடாவருடம்  கமல் பிறந்தநாளில் திருச்சியில் கமல் - ரஜினி ரசிகர்கள் இடையே போஸ்டர் யுத்தம் நடைபெறும், ரஜினி ரசிகர்களுக்கு போட்டியாக போஸ்டர் ஒட்டுவது, ரத்ததான முகாம் நடத்துவது என அதகளப்படுத்துவது கமல் ரசிகர்களின் வழக்கம். இந்நிலையில் கமல்ஹாசனின் 60வது பிறந்தநாளான இன்று திருச்சியில் “நடிகர்களின் முதல்வர் கமல்ஹாசன்“ என வர்ணித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கமல்ஹாசன் முதல்வர் என்றால், ரஜினி துணை முதல்வரா? என ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்போடு அந்த போஸ்டரை கடந்து செல்கிறார்கள். ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, கமலை சீண்டுவதுபோல் அவரது ரசிகர்கள் போஸ்டர் வைப்பது வழக்கம் என்பதால், கமல் பிறந்தநாளின்போது வேறுவழியின்றி ரஜினி ரசிகர்கள் மவுனம் காக்கவேண்டியதாகிறது.

இது ஒருபுறமிருக்க, பொதுமக்களோ “போஸ்டர் அடிப்பதற்காகவே ரூம்போட்டு யோசிப்பாங்களோ இவங்க..! “ என்று போஸ்டரை ரசித்தபடி கடந்துபோகிறார்கள்.
 vikatan.com
சி.ஆனந்தகுமார்

கருத்துகள் இல்லை: