ஞாயிறு, 2 நவம்பர், 2014

ராஷ்மி கௌதம் காட்சிகளை யூடுபில் பார்க்காதீர்கள்!பாவம் கெஞ்சுகிறார்!

ராஷ்மி கவுதம் நடித்த கவர்ச்சி காட்சிகள் யூ டியூபில் வலம் வருவதால் ஷாக் ஆனார்.தமிழில் கண்டேன் படத்தில் நடித்தவர் ராஷ்மி கவுதம். அடுத்து, மாப்பிள்ளை வினாயகர், பிரியமுடன் பிரியா படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் நடித்து வருகிறார். இவர் பிரபலம் ஆகாத தருணத்தில் சில படங்களில் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார். அப்படங்களை அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை, தற்போது ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகைகளில் ஒருவராக பிரபலமாகி இருப்பதால் அவரை கவனிக்க தொடங்கி உள்ளனர்.
ராஷ்மி ஏற்கனவே நடித்த கவர்ச்சி காட்சிகள் தற்போது யூ டியூபில் பரவிக்கொண்டிருக்கிறது. இதையறிந்து அவர் ஷாக் ஆனார். இதுபற்றி அவர் கூறும்போது,‘பழைய படத்தில் நான் நடித்த காட்சிகளை யூ டியூபில் வெளியிடுவதை நிறுத்துங்கள். கடந்த கால வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சில கடினமான தருணங்களை கடந்து வரவேண்டி இருந்திருக்கும். தற்போது அந்த நிலை மாறி இருக்கிறது. பழையதை மறந்துவிட்டு தற்போதைய நிலையை ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். - See.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: