செவ்வாய், 4 நவம்பர், 2014

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும்: நிதின்கட்கரி தகவல்! இனி காங்கிரஸ் எதிர்க்காமல் இருக்கவேண்டுமே?

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக மத்திய கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா பகுதியை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், ராமர் பாலம் இடிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார். இத்திட்டத்தை நிறைவேற்ற 5 பாதைகள் இருப்பதாகவும் அவற்றில் ஒன்றை தேர்வு செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் கூறிய நிதின் கட்கரி, சேது சமுத்திர திட்டத்திற்காக ஏற்கனவே செலவழிக்கப்பட்ட தொகையை வீணடிக்காமல் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.puthiyathalaimurai.tv/

கருத்துகள் இல்லை: