ஞாயிறு, 2 நவம்பர், 2014

EVKS இளங்கோவன் ! வாசன் 'அப்செட்' :சிதம்பரம், தங்கபாலு, பிரபு 'ஷாக்'

ஞானதேசிகனை பதவி விலக செய்து, காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்த, முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, அவரது ஆதரவாளரான இளங்கோவனை தலைவராக்கி, அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்.அவரது அதிரடி நடவடிக்கை, தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களான சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், பிரபு, பீட்டர் அல்போன்ஸ், ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோரையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காங்கிரஸ் மேலிடத்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததால், வாசனுக்கான செல்வாக்கு டில்லியில் குறையத் துவங்கியது; ராகுலிடம் இருந்த நெருக்கமும் சரிந்தது. இதனால், அவரது ஆதரவு தலைவராக இருந்த ஞானதேசிகனை, கலந்து பேசாமலேயே எல்லா முடிவுகளையும் கட்சி மேலிடம் எடுத்து வந்தது.  ராகுல் , வாசன் இருவருமே வாரிசு அரசியலின் அடையாளம்...... எந்தவித தகுதியும் இல்லாத தற்குறிகள்.......யார் யாருக்கு ஆப்பு வைத்தால் என்ன?
தமிழகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரமும், அவரது ஆதரவாளர்களும், தமிழக தலைமைக்கு எதிராக, ஒத்துழையாமை இயக்கம் நடத்தி வந்ததையும் மேலிடம் கண்டுகொள்ளவில்லை.

இந்த சூழ்நிலையில், கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுத்ததன் காரணமாக, வாசன் மீதான ராகுலின் கோபம் அதிகமாகியது. அதனால், ஞானதேசிகனை மாற்றி விட்டு, வேறு தலைவரை நியமிக்கும் முடிவுக்கு அவர் வந்தார்.அதை உணர்ந்த வாசன், டில்லி தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில், தனிக் கட்சி துவங்குவது குறித்து ஆலோசனை நடத்த துவங்கினார்.அதையும் ராகுல் கண்டுகொள்ள மறுத்ததால், தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் விலகினார்.இதைதொடர்ந்து, டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்த, ஜனார்த்தன திவேதிக்கு, நேற்று காலையில் ஒரு தகவல் வந்தது. 'உடனடியாக, தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவனை அறிவியுங்கள்' என, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.அதன்படி உடனடியாக இளங்கோவன் பெயர் அறிவிக்கப்பட்டது. அவரை தேர்வு செய்வதற்கு முன், சிதம்பரம், தங்கபாலு, பிரபு உள்ளிட்ட யாரிடமும் ஆலோசனை நடத்தப்படவில்லை. கட்சி தலைமை இந்த அறிவிப்பை வெளியிடும் நேரத்தில், சிதம்பரம் டில்லியில் தான் இருந்தார்.


நிலை என்ன?

தங்கபாலுவும், பீட்டர் அல்போன்சும், 'ஆலோசனை' நடத்திக் கொண்டிருந்தனர். இப்படி யாருக்கும் தெரியாமல், திடீரென்று இளங்கோவன் பெயரை அறிவித்ததால், இந்த தலைவர்கள் எல்லோரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சிதம்பரம் அணிக்கு எதிராக, வாசனுடன் கைகோர்த்திருந்தார் இளங்கோவன். அவரை தலைவராக உட்கார வைத்து, வாசனுக்கு எதிராக திருப்பி விட்டுள்ளார் ராகுல். இதனால், வாசன் தனிக் கட்சி துவங்கினாலும், இளங்கோவனும் அவரது ஆதரவாளர்களும், வாசனுக்கு ஆதரவாக செல்ல முடியாத நிலையை, காங்கிரஸ் மேலிடம் ஏற்படுத்தி விட்டது என, காங்கிரசார் கூறுகின்றனர்.அதே நேரத்தில், சிதம்பரம், தங்கபாலு, பிரபு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: