சனி, 8 நவம்பர், 2014

ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனிக்கு ஒபாமா ரகசியக் கடிதம்

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு கோரி, ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசியக் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் வெளியாகும் "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையில் வெளியான செய்தி:
ஈரானில் உச்ச அதிகாரம் படைத்த மதத் தலைவர் அயதுல்லா கமேனிக்கு, அதிபர் ஒபாமா கடந்த மாதம் ரகசியக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஈரானின் ஆதரவை அவர் கோரியிருந்தார்.
எனினும், நவம்பர் 24-ஆம் தேதி கெடுவுக்குள் அணுசக்திப் பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் காணப்பட்டால்தான், ஐ.எஸ். விவகாரத்தில் அமெரிக்காவும், ஈரானும் இணைந்து செயலாற்றுவது சாத்தியமாகும் எனவும் ஒபாமா தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை ஒடுக்க, ராணுவ ரீதியாகவும், ராஜீய ரீதியாகவும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியில், ஈரானுக்கு முக்கியப் பங்குள்ளதாக ஒபாமா கருதுவது இந்தக் கடிதத்தின் மூலம் வெளிப்படுகிறது என்று அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து, அயதுல்லா அலி கமேனிக்கு ஒபாமா எழுதும் 4-ஆவது கடிதம் இது.
இந்தச் செய்தி வெளியானதையடுத்து, ஒபாமாவுக்கு குடியரசுக் கட்சி எம்.பி.க்களான ஜான் மெக்கெய்ன், லிண்ட்úஸ கிரஹம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ்.ஸýக்கு எதிராக, மிதவாத சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவிமடுக்க மறுக்கும் ஒபாமா, அயதுல்லா கமேனியை அணிசேர அழைப்பது கண்டிக்கத்தக்கது என ஜான் மெக்கெய்ன் கூறினார்.
லிண்ட்úஸ கிரஹம் கூறுகையில், ""ஒபாமா கூட்டணி அமைக்க விரும்பும் அதே ஈரான்தான், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தது'' என்று குற்றம் சாட்டினார் dinamani.com

கருத்துகள் இல்லை: