செவ்வாய், 4 நவம்பர், 2014

ரஜினியின் லிங்கா அதிரவில்லை ? ஷங்கரின் ஐ சம்பள பாக்கி? கோலிவூட்டின் மறுபக்கம் ?


நடிகர் ரஜினியின் புதுப்பட டீஸரை சென்ற வாரம் வெளியிட்டனர். அவரது பொம்மைப்பட டீஸரின் சாதனையை இந்தப் படம் முறியடிக்கும் என்று அனைவருமே எதிர்பார்த்தனர். அது பொம்மை. இது அசல். போதாததுக்கு ஒன்றுக்கு இரண்டு வேடங்கள் ஆனால், பொம்மை பட டீஸருக்கு காட்டிய ஆர்வத்தை இந்தப் படத்துக்கு ரசிகர்கள் காட்டவில்லை. அதைவிட குறைவான பார்வையாளர்களே புதிய படத்தின் டீஸரை பார்த்துள்ளனர். மேலும் பிரமாண்ட இயக்குனரின் ஓரெழுத்துப் படத்தின் ட்ரெய்லரை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ஒரே நாளில் பார்த்தனர். உச்சத்தின் படத்தை ஒன்பது லட்சத்துக்கும் குறைவானவர்கள். படத்தின் ஆடியோ உரிமையும் எந்திர மனிதனைவிட இரண்டு கோடி கம்மியாகதான் போயுள்ளது. என்ன நடக்குது. ரசிகர்கள் உஷாராயிட்டாங்களா...
இயக்குனர்  சங்கரின் ஐ  படம் தமிழ் சினிமாவில் அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்று ஒருபக்கம் பெருமை பேசுகிறார்கள். இன்னொரு பக்கம், படத்தை உருவாக்கியவர்கள் பேசிய சம்பளம் படம் முடிந்தும் கைக்கு வரலை என்று புலம்பிக் கொண்டுள்ளனர்.
டீக்கடையிலும், தெருவிலும் புலம்பிக் கொண்டிருந்தவர்கள் இப்போது இணையத்திலும் தைரியமாக இந்த தடுகித வேலையை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு மூன்று மாத சம்பள பாக்கியாம். கிடைக்கிற சொற்ப சம்பளத்தை வைத்து காலந்தள்ளுகிறவர்கள் உதவி இயக்குனர்கள். அவர்கள் நிலையே இப்படி. இதுபோல் பெரிய சம்பளம் வாங்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கணிசமாக காசு தர வேண்டுமாம் தயாரிப்பாளர். படம் வரட்டும் பாக்கியை செட்டில் செய்கிறேன் என்று பணம் தராமல் இழுத்தடிக்கிறார் தயாரிப்பாளர். பாவம் அவரும்தான் என்ன செய்வார். கஜானாவில் இருந்தால்தானே கையில் வரும்.?tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: