
big.jpg)
இதற்கிடையே புகாரின் அடிப்படையில் ஜெ பேரவை செயலாளர் பதவி மற்றும் மனுக்கள் குழுவிலிருந்து அன்பழகன் நீக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமார் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்தார். ஜாமீனில் வெளிவந்துள்ள அவர் கட்சி நடவடிக்கை குறித்து அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்கிறார். நேரடியாக கட்சி அலுவலகத்துக்கு சென்றால் ஜாமீனுக்கு சிக்கலாகும் என்பதால் போயஸ் கார்டனிலேயே கட்சி நடவடிக்கை குறித்து விசாரிப்பதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். மனுக்கள் குழு மந்த கதியில் இருப்பதை உணர்ந்த அவர், மனுக்கள் குழுவுக்கு வந்த மனுக்களை தானே நேரடியாக ஆய்வு செய்து வருவதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதனால் கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.
இது குறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘மனுக்கள் குழு அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஜெயலலிதா சிறைக்கு சென்று வந்ததிலிருந்து கட்சி நடவடிக்கைகளை தீவிரமாக கவனித்து வருகிறார். உளவுத்துறை வழங்கிய ரகசிய ரிப்போர்ட் அடிப்படையில் தான் சிறையில் இருக்கும்போது யார் யார் சிறைக்கு வந்தார்கள்? சிறைக்குள் வந்து தன்னை பார்க்க யார் யார் மனு செய்தார்கள்? என்பதை தெரிந்து கொண்டார். மேலும், மனுக்கள் குழுவின் நடவடிக்கையில் திருப்தி ஏற்படாத அவர் மனுக்கள் குழுவுக்கு வந்த மனுக்களை நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். விரைவில் களையெடுப்பு படலம் தொடங்கலாம் என்றனர்.
/tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக