திங்கள், 3 நவம்பர், 2014

திமுக, அதிமுக அல்லாத பாமக தலைமையில் கூட்டணி அமைப்போம்: ராமதாஸ்

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமையும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக, அதிமுக கட்சிகள் அல்லாத கூட்டணியாக அந்தக் கூட்டணி இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இதனை தெரிவித்தார்.
கடந்த வாரம் ராமதாஸ் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக தலைவர் கருணாநிதியும் மதிமுக, பாமக திமுகவுடன் இணைய முன்வந்தால் கட்சி பொதுக் குழுவில் முடிவு செய்யப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை காங்கேயத்தில் நடைபெற்ற ஈரோடு கணேசமூர்த்தி இல்ல விழாவில் அவர் பங்கேற்று பேசும்போது, "திமுகவுடன் கூட்டணி என்று ஒருபோதும் கூறியது கிடையாது" என்றார்.
அதனைத் தொடர்ந்து இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், திமுக, அதிமுக கட்சிகள் அல்லாத கூட்டணி பாமக தலமையில் அமையும் என கூறியுள்ளார். tamil.hindu.com

கருத்துகள் இல்லை: