செவ்வாய், 4 நவம்பர், 2014

தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள் ஒருவழியா திரைக்கு வருகிறது,

தங்கர்பச்சான் இயக்கிய களவாடிய பொழுதுகள் திரைப்படம் வெளியாவதற்கான சலனங்கள் தெரியத் தொடங்கியிருக்கிறது. பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் தங்கர்பச்சான் இயக்கிய படம் களவாடிய பொழுதுகள். இதுவரை இப்படியொரு சினிமா இந்திய சரித்திரத்தில் எடுக்கப்பட்டதேயில்லை, பார்த்தால் அழுதிடுவீங்க என்றெல்லாம் தங்கர் வழக்கம்போல டமாரம் அடித்திருந்தார். ஆனால் படத்தை வெளியிடாமல் தங்கரை அழ வைத்தது ஐங்கரன் நிறுவனம். கடும் நிதி நெருக்கடி மற்றும் சரியான விலை கிடைக்காதது ஆகிய காரணங்களால் படத்தை தயாரித்த ஐங்கரன் களவாடிய பொழுதுகளை வெளியிடாமலே இருந்தது. இவர்கள்தான் லைகாவுடன் இணைந்து கத்தியை தயாரித்துள்ளனர். கத்தி நல்ல லாபத்தை தந்ததால் அதில் கொஞ்சத்தை களவாடிய பொழுதுகளை வெளியிட செலவளிக்க உள்ளனர். இன்று படத்தின் பாடல்கள் வெளியாகிறது. விரைவில் படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.tamil.webdunia.com 

கருத்துகள் இல்லை: