புதன், 1 அக்டோபர், 2014

சிறுவனை நாய் கூண்டுக்குள் அடைத்த தனியார் பள்ளியை மூட கேரள அரசு உத்தரவு

 திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியான குடப்பனகுன்னு என்னுமிடத்தில் தனியார் மழலையர் பள்ளியில் 4 வயது சிறுவன் ஒருவன் யு.கே.ஜி. படித்து வந்தான். கடந்த மாதம் 25–ந் தேதி அவன் வகுப்பு நேரத்தில் அருகில் இருந்த மற்ற குழந்தைகளிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த வகுப்பு ஆசிரியை அந்த சிறுவனை பள்ளிக் கூடத்தில் இருந்த நாய் கூண்டுக்குள் 3 மணி நேரம் அடைத்து வைத்தார். இதையறிந்த குழந்தைகள் நல ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்தனர்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகி சசிகலா கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்த மாநில கல்வித்துறை துணை இயக்குனர் பள்ளியில் மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதை கண்டுபிடித்தார். இதையடுத்து அவர் சமர்ப்பித்த அறிக்கையின்படி அந்த பள்ளியை மூடுவதற்கு கேரள அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிக்கு கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: