ஜெயலலிதாவின்
ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனு மீது நேற்று கர்நாடக
உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. வழக்கின் மறு விசாரணையை அக்டோபர்
6ம் தேதிக்கு நீதிபதி ரத்னகலா ஒத்திவைத்தார்இதையடுத்து
ஜெயலலிதாவின் சார்பில், நாளையே ( இன்று) விசாரணை செய்ய வேண்டும் என்று
உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இன்று
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா
உட்பட 4 பேரின் மனுக்களுக்கும் இதே நிலைதான் இருந்ததுஇன்று
காலை 10.30 மணிக்கு இந்த மனு விசாரணை வந்தது. இரு தரப்பு வழக்கறிஞர்களும்
விசாரணைக்கு தயாராக இருந்தனர். ஆனால், இந்த மனுவை நீதிபதி விசாரணை
செய்ய மறுத்தார்.
மேல்முறையீட்டு மனுக்களை வழக்கமாக விசாரணை செய்யும் நீதிபதிக்கு அனுப்ப உத்தரவிட்டார். நீதிபதியின் மறுப்பால் மனு வரும் 7ம் தேதிக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. ;
நீதிபதி ரத்னகலா - சிறு குறிப்பு:58 வயதான இவர் 1982-ம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார்.கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவியல் வழக்குகளில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.1996-ம் ஆண்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற இவர் பெங்களூர், ஷிமோகா, சிக்மகளூர் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் மற்றும் முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்துள்ளார்.கடந்த 2013-ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவியேற்ற இவர் தற்போது குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்து வருகிறார்.>குற்றவியல் வழக்குகளில் அனுபவம் மிகுந்த இவர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான ஜாமீன் மனுவை விசாரித்து தீர்ப்பளிக்க இருக்கிறார். nakkheeran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக