தங்கள் தலைவி சிறைக்கு சென்றதை தாங்க முடியாமல்
அ.தி.மு.க.வினர் நடத்தி வரும் போராட்டங்கள், ஆரம்பத்தில் மக்கள் மத்தியில்
‘’அவர்கள் செய்வது நியாயம்தானே..’’ என்று இரக்கத்தை பெற்றுத்தந்தாலும்,
தொடர்ச்சியாக போட்டி போட்டுக்கொண்டு கட்சியினர் பண்ணும் அட்ராசிட்டிகளை
பார்த்து "நல்லா சீன் போடுறாங்காப்பா...’’ என்று மக்கள் எரிச்சல் படும்
வகையில் அ.தி.மு.க.வினரின் போராட்டங்கள் தற்போது சென்று கொண்டிருக்கின்றன.
நாம் போராட்டம் நடத்துவது ஜெயா டிவியில் தெரிந்தால்
போதும், எப்படியும் வருகின்ற தேர்தலில் ஒரு சீட் வாங்கிவிடலாம் என்ற
நினைப்பு கட்சியினர் எல்லோரிடமும் இருப்பதால், போராட்டங்கள் உணர்ச்சிகராமாக
இல்லாமல், சிவாஜித்தனமாக உள்ளது.
இப்படித்தான் கடந்த 30 ஆம் தேதி மதுரையில் பிரமாண்ட உண்ணாவிரதம் என்று அறிவித்தார்கள். கடைசியில் பார்த்தால் ஆயிரம் பேருக்குள்தான் தொண்டர்கள் வந்திருந்தார்கள். ‘’மதுரை மாநகரில் வட்டம், பகுதி, தொகுதி, மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் எண்ணிக்கையே ஐயாயிரத்துக்கு மேல் இருக்கும். பாருங்க வடக்கு மாசி வீதி பக்கம் வாகனங்கள் போகிற அளவுக்கு இடமிருக்குதுன்னா எவ்வளவு பேரு வந்திருக்காங்கன்னு பார்த்துக்குங்க. பின்னே கட்சிக்காரன் எப்படி வருவான், மாவட்ட அமைச்சர் கட்சிக்காரனுக்கு ஏதாவது பண்ணியிருக்கனும்ல....தன் குடும்பத்தை மட்டும் வளர்த்தா, இந்த முக்கியமான போராட்டத்துக்கு இவ்வளவுதான் கூட்டம் வரும்’’ என்று அ.தி.மு.க தொண்டர் நம்மிடம் கூறிக்கொண்டிருந்தார்.

"பாருங்க சாதாரண தொண்டன் கூட ஒரு கருப்பு சட்டையை
வாங்கி போட்டு வர்றான். ஆனா, மேயரும், எம்.பி. கோபாலகிருஷ்ணனும் ஏதோ மங்கள
நிகழ்ச்சிக்கு வர்றது மாதிரி வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு வராங்க...’’ என்ற
கிண்டலும் கேட்டது.
இந்த உண்ணாவிரத்ததில் ஹைலைட் குருமகா சந்நிதானம் மதுரை ஆதீனம்தான். கடந்த நாடாளுமன்றத்தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவை சந்தித்து உறுப்பினர் கார்டு வாங்காத அ.தி.மு.க தொண்டராய் மாறிவிட்ட ஆதீனம், முதல்முறையாக ஒரு அரசியல் கட்சி நடத்தும் போராட்டத்தில் வந்து அமர்ந்தார். அவருக்கு ஒரு கருப்பு துண்டை தொண்டர் ஒருவர் போர்த்த அதிர்ந்த ஆத°னம் அதை நாசுக்காக அவாய்ட் செய்தார். பிறகு மைக் பிடித்த ஆதீனம், "புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒருநாளைக்கு இருபது மணி நேரம் மக்களுக்காக உழைத்தார். அவருடைய நல்ல பல திட்டங்களை பொறுக்க முடியாமல் அரசியல் எதிரிகளால் புனையப்பட்ட பொய் வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. ஆனால், இந்த தண்டனை நிரந்தரமல்ல. தீர்ப்புகள் மாறும் சோதனைகளை கடந்து சாதனை படைக்கும் சக்தி படைத்தவர் அம்மா. இது போன்று பல வழக்குகளை அம்மா சந்தித்துள்ளார். அடுத்த தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்.’’ என்று உரையாற்றிவிட்டு கிளம்பி விட்டார். இந்த பகுதியில் எந்த போராட்டம், கூட்டத்திற்கும் அனுமதியில்லை என்று காவல்துறை ஏற்கனவே அறிவித்திருக்கிறது. ஆனால், அதை மீறி நடக்கும் போராட்டத்திற்கு அவர்களே பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.

சுப்பிரமணியன் சுவாமியின் பூர்வீக வீடு சொந்த ஊரான
சோழவந்தான் முள்ளிபள்ளத்தில் இருக்கிறது. இங்கு யாருமே வசிக்கவில்லை. அந்த
வீட்டிற்கு முன் சில அ.தி.மு.க.வினர் கோஷம் போட அவர்களை காவல்துறையினர்
விரட்டி விட்டனர். ஜெயலலிதாவுக்கு தண்டனை செய்தி கேட்டவுடன் ஏழுமலை வங்கி
நாராயணபுரத்தை சேர்ந்த பிளஸ்டூ படிக்கும் நாகலெட்சுமி என்ற மாணவி
மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். இது வேறு மேட்டராக இருக்குமென்றுதான்
எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், சீரியசான நிலையிலும் அந்த மாணவி, "என்னை
போன்ற ஏழை மாணவிகளுக்கு படிப்பதற்கு அனைத்து உதவிகளும் செய்தவர் அம்மா,
அவரை ஜெயிலில் போட்டுட்டாங்க என்ற செய்தியை என்னால் ஏத்துக்க முடியலை,
அதனாலதான் தீக்குளிச்சேன்’’ என்றிருக்கிறார். தற்போது அந்த மாணவி
இறந்துவிட்டார். இதை தொடர்ந்து மானாமதுரையில் சலூன்கடைக்காரர் பூச்சி
மருந்து குடித்து அம்மாவுக்காக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இதேபோல் தமிழகம் முழுதும் பல தற்கொலைகள், மாரடைப்பு மரணங்கள் அம்மாவுக்காக நடந்து வருவதாக கட்சியினர் பரப்பி வருகின்றனர். கட்சியினரும் சிறையிலிருந்தாலும் அம்மா தங்களை கண்காணிப்பார் என்ற நம்பிக்கையில் சளைக்காமல் புதுப்புது வடிவத்தில் செய்து வருகிறார்கள். ராமநாதபுரத்தில் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டலத்தலைவர் தமிழ் செல்வன், இன்னொருவரையும் இணைத்துக்கொண்டு போக்குவரத்து கழக டெப்போ வாசலில் சாகும்வரை உண்ணாவிரதம் உட்காந்து விட்டார். ஆனால், நகர் செயலாளர் அங்கு சாமியிடம் எந்த அனுமதியும் கேட்காமல் உட்கார்ந்ததால், லோக்கல் கட்சியினர் யாரும் எட்டி பார்க்கவில்லை. இதற்கு மேல் பாடி கண்டிஷன் தாங்காது என்று நினைத்த தமிழ் செல்வன் மாலையில் குளிர்பானத்தை குடித்து முடித்து எஸ்கேப்பாகிவிட்டார்.

திடீரென்று எந்த முன்னறிவிப்புமில்லாமல் கடந்த 30ஆம்
தேதி மனித சங்கிலி என்று அ.தி.மு.க.வினர் மதுரையில் அங்கங்கே அருந்த
சங்கிலிபோல் நிற்க ஆரம்பிக்க, இந்த திடீர் போராட்டத்தால் வாகன ஓட்டிகள்
தடுமாறிப் போனார்கள்.
கீழக்கரையில் ஜெயலலிதா விடுதலையாக பிள்ளையார் கோயிலில் சிறப்பு பூஜையை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் நகராட்சி சேர்மன் என்ற முறையில் வந்து கலந்து கொண்டார் ராவியத்துல் கதரியாவும் அவர் கணவரும். அதோடு அது முடிந்தது. ஆனால், முஸ்லிம் அமைப்புகள் இதை ஒரு சர்ச்சையாக்கி எப்படி கோயிலில் பூஜையில் ஈடுபடலாம் என்று பிரச்னையை கிளப்ப சொந்த சமூகத்தின் நெருக்கடியை தாங்க முடியாமல் புழுங்கி கொண்டிருக்கிறார்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரையில் கழுத்தளவு தண்ணீரில் அர்ச்சகர்கள் தலைமையில் தரிசனம் செய்தனர் அ.தி.மு.க.வினர். நம்ம சங்கராச்சாரியாரை சிறையில் அடைத்தவர்தானே இவர், ராமேஸ்வரம் கோயிலுக்குள் அவரை அனுமதிக்காமல் திறப்பி அனுப்பியவர்தானே ஜெ, அவருக்கு போய் அர்ச்சகர்கள் தரிசனம் செய்யலாமா என்று அர்ச்சகர்களுக்குள் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அரசு அலுவலகங்களில் தொங்கும் ஜெயலலிதாவின் படங்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று சிலர் சுட்டிக்காட்ட, அகற்றும்படி உத்தரவு வந்து விட்ட பிறகும் இன்னும் பல இடங்களில் ஜெயலலிதா படம் தொங்கி கொண்டிருக்கிருக்கிறது. அதிலும் ஆயுத பூஜையை முன்னிட்டு சில நாளிதழ்கள் வெளியிடும் தொழில் மலர்களில் ஊராட்சிமன்ற, ஒன்றிய அலுவலக அரசு விளம்பரங்களை வெளியிடுவார்கள். அந்த விளம்பரங்கள் அனைத்திலும் தற்போது ஜெயலலிதா படம்தான் வந்துள்ளது. பேருக்கு கூட ஓ.பி.எஸ் படம் இல்லை.
இப்படியே தொடர்ந்து போராட்டம் என்ற பெயரில் நடக்கும் எரிச்சல்பிளஸ் காமெடி காட்சிகளால் களைகட்டி வருகிறது தென் மாவட்டங்கள்.
செ.சல்மான் vikatan.com
படங்கள்: பா.காளிமுத்து, ஈ.ஜெ.நந்தகுமார், நிவேதன் (மாணவ புகைப்படக்காரர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக