வாய்தா ராணி என்பது 18 வருசம் அம்மா கஷ்டப்பட்டு
உழச்சி வாங்கின பட்டம். எப்பிடியெல்லாம் ரூம் போட்டு யோசிச்சி கலர் கலரா
காரணம் சொல்லி வாய்தா வாங்கினாங்க!
தமிழ் மொழிபெயர்ப்பு வேணும், செராக்ஸ் காப்பி சரியில்லை, பில்டர் காப்பி சரியில்லை, வயிறு சரியில்லை..! இவுங்க அடிச்ச அடியில நீதிபதியெல்லாம் தெனாய்ஞ்சில்ல போனாய்ங்க. வாய்தா சப்ஜெக்டை வச்சி மட்டுமே நூறு பேர் பி.எச்டி பண்ணலாமே.
அப்பேர்ப்பட்ட வாய்தா ராணிக்கு டக்குன்னு பெயில் கொடுத்துட்டா மரியாதையா இருக்குமா? ஆனா ரெண்டு வாய்தாவுக்குள்ளேயே ர.ர க்களுக்கு மூச்சு வாங்குது. 7-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வச்சவுடனே, இது அநியாயம், அக்கிரமம், அநீதின்னு கத்துனாங்களாம் தமிழ்நாட்டுலேர்ந்து போன அம்மா வக்கீலுங்க. ஜெத்மலானி முந்தாநாள் லண்டன்லேர்ந்து ஒரு லா பாயின்டை எடுத்து விட்டாரு. தண்டனை பத்து வருசத்துக்கு உள்ளே இருந்தால், அரசு தரப்பு கருத்தை கேட்காமலேயே பெயில் கொடுக்கலாம்னு சி ஆர்பிசி யில இருக்குதாம். அரசு தரப்பை விசாரிக்காமலேயே குற்றவாளியை விடுதலை செய்யலாம்னு கூட சிஆர்பிசி யில எங்கனா இருக்கும். பார்ப்பானுக்கும் பணக்காரனுக்கும் மனுநீதியில இல்லாத பரிகாரமெல்லாம் சிஆர்பிசி யில இருந்தாகணுமே!
ஜெத்மலானிதான் பெரிய அப்பாடக்கராச்சே. முந்தாநாள் நீதிபதி குன்ஹாவை தாக்குன மாதிரி, நேத்து லைட்டா நீதிபதியை மிரட்டிருக்காரு. “நீதிமன்றத்தை மிரட்டுற மாதிரி பேசற வேலையெல்லாம் வச்சுக்காதீங்கன்னு” திருப்பி கொடுத்திருக்காங்க ரத்னகலா.
இன்னைக்கு காலையில் வழக்கு வந்திருக்கு. “வழக்கின் முக்கியத்துவம் கருதி 7-ம் தேதி ரெகுலர் கோர்ட்டுல விசாரிக்கட்டும்”-னு வாய்தா போட்டு விட்டுட்டாங்க. உடனே, “இன்னிக்கி சாயங்காலமே வேற நீதிபதி விசாரிக்கணும்”னு தலைமை நீதிபதிக்கு ர.ர க்கள் பெட்டிசன் கொடுத்தாங்களாம். “வேண்டாப்பா. தலைமை நீதிபதியையும் டென்சன் பண்ணி காரியத்தை கெடுத்துராதீங்கப்பா. பெட்டிசன வாபஸ் வாங்குங்க” என்றாராம் ஜெத்மலானி.
ஏற்கெனவே புதுக்கோட்டை செசன்ஸ் நீதிமன்றத்தில் பிரேமானந்தா வழக்கை நடத்தும்போது நீதிபதி பானுமதியை இதே மாதிரி மிரட்டி, பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை வாங்கிக் கொடுத்தவர் ஜெத்மலானி. பெரிய்ய வக்கீல்.
“வாங்கடா, வந்து பாருங்கடா, இதுதாண்டா அட்ரஸு. வண்டு முருகன், கைதி நெம்பர்- 7402 , பரப்பன அக்கிரகாரா ஜெயில், பெங்களூரு” ன்னு சொல்லி, வம்பிழுக்கிறாரு. அம்மாவுக்கு வெயிட்டா எதுனா வாங்கிக் கொடுக்காம வுடமாட்டாரு போல! vinavu.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக