புதன், 1 அக்டோபர், 2014

கஞ்சா வழக்கிலாவது கலைஞரையும் ஸ்டாலினையும் கைது செய்ய அதிமுக அரசு முழு முயற்சி !

தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் மீது போடப்பட்டிருக்கும் வழக்கில், கைது செய்ய, போலீசார் தீவிரமாகி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், நான்கு ஆண்டு கள் தண்டனை விதித்து, அவரை சிறைக்கு அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வினர் பஸ் எரிப்பு, சாலை மறியல், கடைகளை அடித்து நொறுக்குதல், சிலைகளை உடைத்தல் என, பல்வேறு ரூபங்களில், தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள, சென்னை கோபாலபுரத்திற்கு, அ.தி.மு.க.,வினர் ஏராளமானோர் திரண்டு வந்து, வீட்டை நோக்கி கல் வீசினர்.இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், அங்கு தயாராக இருந்த தி.மு.க.,வினர், எதிர் தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதில், அ.தி.மு.க., தரப்பில் ஒருவருக்கு, மண்டையில் கடும் காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.  சு சாமியையும் கஞ்சா வழக்கு அல்லது பலாத்கார வழக்குன்னு எதையாவது போட்டு  கைது செய்ய முயற்சிக்க வேன்டியது தானே?அதுக்கு  துப்பில்லை ! அவர்  பார்ப்பான் வேற !


தி.மு.க., தரப்பினருக்கும், கடுமை யான காயங்கள் ஏற்பட்டதாகவும், அக்கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.ஆனால், அ.தி.மு.க., தரப்பினர், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரின் தூண்டுதல் படி, பயங்கர ஆயுதங்கள் கொண்டு, தி.மு.க.,வினர் கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து இருந்தனர்.இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார், மூன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். ஆனால், உடனடியாக யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் உள்ளிட்டோரை, கைது செய்து நடவடிக்கை எடுக்க, போலீசார் தீவிரமாகி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனால், இருவரும் போலீசாரால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தி.மு.க., வினர் கருதுவதால், அதை எதிர்கொள்ள தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: