சனி, 4 அக்டோபர், 2014

சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் தீட்சிதர்களின் கொள்ளை வெற்றிகரமாக தொடர்கிறது !

சிதம்பரம், அக்.3- சிதம்பரம் நடராஜன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தீட்சதர்களின் கைகளுக்குள் சென்று விட் டது; இனி அவர்கள் பாடு தான் வேட்டைதான் கொள்ளையோ கொள்ளை தான்.
செயல் அலுவலர் நிய மனத்தை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் 2014 ஜன., 6ம் தேதி உத்தரவிட்டதை அடுத்து, சிதம்பரம் நட ராஜர் கோவிலில், அற நிலையத் துறையால் வைக் கப்பட்ட உண்டியல்கள்,  அகற்றப்பட்டுள்ளன.
தீட்சதர்கள் தீட்சதர்கள் நிர்வாகத் தில், முறைகேடு நடக்கிறது என்று கூறி, இக்கோவி லுக்கு அறநிலையத் துறை செயல் அலுவலரை நிய மிக்க, 1987ல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, தீட்சிதர்கள் சார்பில், பல்வேறு நீதி மன்றங்களில் தொடரப் பட்ட வழக்குகளின் முடிவாக, ஜன., 6ஆம் தேதி, உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில், செயல் அலுவலர் நியமனம் ரத்து செய்யப்பட்டதுடன், கோவில் நிர்வாக பணி குறித்த சில வழிகாட்டு நெறிமுறைகளும் வழங் கப்பட்டன. 
  இக்கோவி லுக்கு, அறநிலையத் துறை செயல் அலுவலர் நியமனம் ரத்து செய்யப்பட்டதை யடுத்து, கோவில் நிர்வாகம் பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தது.
அரசாணை உச்சநீதிமன்ற ஆணை செயல்படுத்துவதற்கான நிர்வாக உத்தரவு பிறப் பிக்கப்படாததால், 2009 முதல், அறநிலையத் துறை யால் இங்கு வைக்கப்பட்ட உண்டியல்கள், பிரசாத விற்பனையகங்கள் அகற்றப் படாமல் உள்ளன. இந்நிலையில், இதற்கான வழிகாட்டுதல்கள் அடங் கிய அரசாணை, கடந்த 19ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, சிதம்பரம் நட ராஜர் கோவில் அற நிலை யத் துறை கட்டுப்பாட்டில் இருந்த போது, செயல் அலுவலரால் வைக்கப் பட்ட உண்டியல்களை அகற்றுவது, ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த பிரசாத விற்பனையகங் களை அகற்றுவது, அற நிலையத் துறை வசம் இருந்த காலத்தில் நடந்த வரவு செலவு கணக்குகளை, பொது தீட்சிதர்களிடம் ஒப்படைப்பது, ஆகியவை பற்றி, அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அரசாணை பிறப் பிக்கப்பட்டதை அடுத்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஐந்து இடங் களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் அகற்றப் பட்டுள்ளனவாம்.
வருமானம் வெறும் ரூ.37 ஆயிரம் தானா?
சிதம்பர தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் நடராஜர் கோவில் வருமானம் குறித்த கணக்கு ஒன்றை தாக்கல் செய்தனர் அதில் 2007-ஆம் ஆண்டு  கோவி லுக்கு வந்த வருமானம் 37,199 ரூபாய் என்றும் ஆண்டு  முழுவதும் இறை வன் திருப்பணி மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத் ததன் செலவு 37,000 என்றும் மீதமுள்ள 199 ரூபாய் தற்போது இருப்பு உள்ளது, இது தான் இம்மாதம் அதிகம் வந்த வருவாய் என்றும் கூறி னார்கள்.
தீட்சதர்கள் அடித்த கொள்ளை
2009 ஜனவரி மாதம் தீட்சிதர்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி சிதம் பரம் நடராஜர் கோவிலில் உண்டியல் வைக்கப்பட் டது. இந்த உண்டியலில் சேர்ந்த பணத்தை எடுக்கச் சென்ற இந்து அறநிலை யத்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையில் அற நிலையத்துறை அதிகாரி களும், தீட்சிதர்களும் சமாதானமான பிறகு 45 நாட்களுக்கு பிறகு சிதம் பரம் கோவிலில் வைக்கப் பட்ட உண்டியல் அற நிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப் பட்டு எண்ணப்பட்டது. அதில் ரூ. 2 லட்சம் வசூ லாகியுள்ளது.
ஆண்டு ஒன்றுக்கு ரூ.37,189 வருமானம் என்று சொன்ன தீட்சதர்கள் எங்கே? அற நிலையத் துறைக் கட்டுப்பாட்டுக்கும் கீழ் அக்கோயில் வந்த நிலையில் 45 நாட்களில் ரூ.2 லட்சம் வரவு என்ற உண்மை வெளிப்பட்டது எங்கே?  அப்படியென்றால் இந்தத் தீட்தசர்கள் எவ்வளவுக் கொள்ளை - எவ்வளவு நீண்ட காலமாக அடித்திருப்பார்கள் என் பதைத் தெரிந்து கொள்ள லாம்.
அந்தக் கொள்ளை மீண்டும் தொடர்கிறது.

.viduthalai.in/

கருத்துகள் இல்லை: