செவ்வாய், 30 செப்டம்பர், 2014

ஜெயலலிதாவுக்கு நாளை ஜாமீன் கிடைக்கும் ?

ஜெயலலிதா ஜாமின், மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிக்க வேண்டும் என்று விடுமுறை கால நீதிபதிக்கு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் ரூ.100 கோடி அபாராதம் அளித்தும் உத்தரவிட்டது. இதையடுத்து, ஜெயலலிதா சார்பாக கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமின் கோரியும், வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரியும் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது. தசரா பண்டிகையையொட்டி நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், இந்த மனுக்கள் நேற்று கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும், விடுமுறை கால நீதிபதி ரத்னகலா நாளை விசாரிப்பார் என்று கூறினார். நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா ?


இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில் வாதாடுவதற்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி பெங்களூர் வந்தார். அரசு சார்பாக வாதாட பவானி சிங்கிற்கு அரசு அறிவிப்பாணை கிடைக்காததால், வழக்கை விசாரிக்க காலஅவகாசம் வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை 6-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். இந்நிலையில், ஜாமின் மனுவை அவசர கால மனுவாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி ரத்னகலா இந்த மனுவை நாளை விசாரிப்பார் என்று கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஜெயலலிதா ஜாமின் மனு மீதான விசாரணை நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: