கிரிமினல் வழக்குகளில் குறைந்த பட்சம் 2
ஆண்டுகள் தண்டனை விதிக்கப் பட்டாலே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவியில்
நீடிக்க முடியாது. மேல்முறையீடு செய் தாலும் பதவியில் நீடிக்கும் தகுதி
அவர் களுக்கு கிடையாது. உடனடியாக பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசியலில் குற்றப் பின்னணி கொண்டவர்கள்
அதிகளவில் ஈடுபடுகின்றனர்.
இதனால் அரசியலில் நேர்மை குறைந்து,
வன்முறையும், ஊழலும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ
சட்டத்தில் உள்ள முரண்பாடுகளை நீக்கும்படியும், தேர்தல் சீர்திருத்தத்தை
அமல்படுத்தும்படியும் வலியுறுத்தி வருகிறது தேர்தல் ஆணையம்.
கிரிமினல்
வழக்குகளில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை
விதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட் டியிடும் தகுதியை இழக்கின்றனர்.
தண் டனைக் காலம் முடிந்த பிறகும், அடுத்த 6
ஆண்டுகளுக்கு தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாது என்று மக்கள் பிரதி
நிதித்துவ சட்டப் பிரிவு 8 (3)ல் கூறப்பட் டுள்ளது. அதே நேரம், பதவியில்
இருக்கும் எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு நீதிமன்றங்கள் தண்டனை விதித்தாலும்
கூட, 3 மாதங் களுக்கு அவர்களை தகுதியிழப்பு செய்யக் கூடாது. அதற்குள் மேல்
நீதிமன்றங்களில் அவர்கள் மேல்முறையீடு செய்தால், அந்த வழக்கில் இறுதி
தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் தகுதியிழப்பு செய்யக் கூடாது என்று மக்கள்
பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 8(4)ல் கூறப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட்
டுள்ள இந்த முரண்பாடான சலுகையை சட்டத் திருத்தம் மூலம் நீக்கும்படியும்,
தண் டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி களின் பதவியை உடனடியாக பறிக்கும்
படியும் மத்திய அரசை தேர்தல் ஆணை யம் கூறி வருகிறது. ஆனால், அரசியலில்
தங்களுக்கு வேண்டாதவர்களை பழி வாங்குவதற்கு இந்த சட்ட திருத்தத்தை தவறாக
பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறி, அரசியல் கட்சிகள் இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், லில்லி தாமஸ் என்ற
வழக்குரைஞரும், லோக் பிரஹரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயலாளர்
என்.சுக்லாவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகள் 8 (3), 8(4),ல்
உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர். தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகளை பதவியில் நீடிக்க
அனுமதித்தால், அரசியலில் குற்றவாளிகளின் ஆதிக்கம் மேலோங்க ஊக்கம்
அளித்ததுபோல் ஆகிவிடும். மேலும், தண்டனை விதிக்கப் பட்ட மக்கள்
பிரதிநிதிகளை பதவியில் நீடிக்க அனுமதிப்பது, அரசியல் சட்டத் துக்கு
விரோதமானது.
எனவே, நீதிமன்றங் களில் தண்டனை
விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவியை உடனடியாக பறிக்கும்படி
உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவர்கள் கோரினர். நீதிபதிகள் ஏ.கே.
பட்நாயக், எஸ்.ஜே. முகோபாத்யா ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்து
அளித்த தீர்ப்பில், குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப் பட்ட எம்.பி.,
எம்எல்ஏ.க்கள் பதவியில் நீடிக்கக் கூடாது. மேல் நீதிமன்றங்களில்
மேல்முறையீடு செய்தாலும் பதவியில் நீடிக்க முடியாது. தண்டனை விதிக்கப் பட்ட
தினத்தில் இருந்தே, அவர்கள் தகுதியிழப்பு பெற்று விடுவார்கள். இந்த
தீர்ப்புக்கு முன்பாக தண்டனை பெற்று, மேல்முறையீடு செய்துள்ள மக்கள்
பிரதிநிதிகளுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது என்று உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கும், கிரிமினல்
வழக்குகளில் சிக்கியுள்ள எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கும், உச்ச
நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு அதிர்ச்சியை அளித் துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி
பார்க்கப் போனால் மத்திய அமைச்சர வையைச் சேர்ந்தவர்களின் கெதி என்ன? என்பது
முக்கிய கேள்வியாகும். இதோ அந்தப் பட்டியல்:
பிரதமர் நரேந்திர மோடி - குஜராத்
கலவரவழக்கு முதல் மனைவி பெயரை மறைத்தது, மற்றும் வாக்குச்சாவடியில் தேர்தல்
சின்னத்தை விதிமுறையை மீறிக் காண்பித்தது தொடர்பான பல்வேறு வழக்குகள் 1.
ராஜ்நாத் சிங் - பாபர் மசூதி இடிப்பு வழக்கு
2. அருண் ஜேட்லி - நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு(குஜராத் போலி என் கவுன்டர் வழக்கில் தலையீடு)
3. சுஷ்மா ஸ்வராஜ் - பாபரி மசூதி இடிப்பு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு)
4. வெங்கய்ய நாயுடு - அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, மற்றும் சட்ட விரோத நில ஆக்ர மிப்பு பாபர் மசூதி இடிப்பு வழக்கு
5. நிதின் கட்கரி - 134 135 143, 341,
186, 448, 506 ,188 வரியேய்ப்பு, தொழிற்துறை நிறுவனங்களின் பெயரில்
ஏமாற்றுதல், மற்றும் போலியான தகவலில் வங்கிக்கடன் வாங்கியது, (தனது கார்
ஓட்டுநர் தோட்ட பாராமரிப்பாளர் பெயரில் கூட கம்பெனி பதிவு செய்து
வைத்துள்ளார், நீண்ட நாட்களாக பூட்டிக்கிடந்த ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தை
தனது அலுவலக முகவரியாக கொடுத்துள்ளார்.) இவருக்கு 7 ஆண்டு முதல் 12 ஆண்டு
வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம்.
6. மேனகா காந்தி - 394, 506 பிரிவின் கீழ் வழக்கு.
7. கல்ராஜ் மிஸ்ரா - 120 பி, 153, 153 எ, 153பி, 147, 148, 149, 436, 395, 302 போன்ற பிரிவுகளில் வழக்கு
8. நஜ்மா ஹெப்துல்லா - அரசு அதி காரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்தது,
9. ஆனந்த் குமார் - ஊழல் வழக்கு இவர் பல குற்ற வழக்குகளுக்கு ஆளானவர்.
10. ரவிசங்கர் பிரசாத் - வன்முறையைத் தூண்டியதாக வழக்கு
11. உமா பாரதி - இவர் தான் குற்ற வாளிகள்
பெயர் லிஸ்டில் முதலிடம் இவர் மீது 61 கடுமையான வழக்குகள், 12
பொதுக்குற்றவழக்கு, மற்றும் 108 சாதாரன குற்றவழக்கு 12. அசோக் கஜபதி ராஜூ -
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மற்றும் கலவரத்திற்கு தூண்டுகோலாகப் பேசியது,
13. ஹர்சிம்ரத் கவுர் பாதல் - கணவர் மனைவி இருவர் மீது குற்ற வழக்கு
உள்ளது. 14. நரேந்திர சிங் தோமர் - இவர் மீது 12 வழக்குகள் உள்ளன. இதில்
இரண்டு கடுமையான குற்றவழக்குகள் ஆகும்
15. ஜூவல் ஓரம் - 143, 341, 283, 341 பிரிவுகளில் வழக்கு.
16. ஹர்ஷ வர்த்தன்- 147, 149, 186, 323,
325, 332, 353, 427 போன்ற பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
17. ஸ்மிருதி இரானி - போலியான தகவல்கொடுத்த வழக்கு, டில்லி நாடாளு மன்றக்
காவல் நிலையம் வழக்கு நிலு வையில் உள்ளது. 18. ராதா மோகன் சிங் - கணவன்
மனைவி இருவர் மீதும் சேவை நிறுவனத் தில் நடந்த பணபரிவர்த்தனை தொடர்பான
வழக்கு
19. தாவர்சந்த் கெலாட்- ஊழல் வழக்கு குவாலியர் காவல்நிலையம் (சிறைவாசி யாக இருந்தவர்)
20. சதானந்த கவுடா - எடியூரப்பா ஊழல்
வழக்கில் இவருக்கும் பங்கு உண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது
கேபினெட் அமைச்சர்கள். இணை அமைச்சர்களில், 21. ஜெனரல் வி.கே.சிங் 185,
353, 147, 148, 149, 34 பிரிவுகளில் வழக்கு.
மேற்கண்ட இ.பி.கோ.படி அமைச்சர் களின் மீது
குற்றவியல் வழக்கு உள்ளது. 59 பாஜக எம்பிகள் மீது பயங்கர குற்றங்கள்
தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் கொலை, கொள்ளை, பாலியல்
வன்முறை, ஆட் கடத்தல், கலவரத்திற்கு திட்டமிடுதல், மற்றும் கலவரத்தை
தூண்டுதல் என பல் வேறு வழக்குகள், இந்த வழக்கு எல்லாம் சரியான படி
நடந்தால் ஆயுள் தண்டனை முதல் கடுமை யான கடுங்காவல் வரை கிடைக்கும்.
என்ன நடக்கப் போகிறது? நாடே எதிர்ப்பார்க்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக