சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைத் தண்டனை பெற்றதை அடுத்து
புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
சென்னையில் இன்று நடைபெறுகிறது. மக்கள் பிரிதிநிதித்துவ சட்டப்படி ஊழல்
வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி எம்.எல்.ஏக்கள் விசாரணை நீதிமன்ற
தீர்ப்பு வெளியான உடன் தங்களது பதவிகளை இழக்க நேரிடும். அதன்படி
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள தனது எம்.எல்.ஏ மற்றும்
முதலமைச்சர் பதவியை இழந்தார். இந்த சூழலில் சென்னையில் இன்று மாலை
எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அடுத்த முதலமைச்சரை தேர்வு
செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே
ஜெயலலிதா பதவி இழந்த போது முதலமைச்சரான தமிழக நிதியமைச்சர்
ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் இடப்பாடி பழனிசாமி அல்லது முன்னாள் தலைமை
செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரில் ஒருவர் புதிய முதலமைச்சராக தேர்வு
செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுத்தொடர்பாக ஜெயலலிதாவுடன் ஆலோசனை
நடத்தி முடிவு எடுக்கப்படுகிறது. தினகரன்,.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக