சொத்துக்குவிப்பு
வழக்கில் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி
ஆகிய நால்வரும், தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக தனித்தனியாக ஜாமீன் கேட்டு
மனு தாக்கல் செய்துள்ளனர்.ஒவ்வொரு ஜாமீன் மனுவுடன் தீர்ப்பின் நகலும் ஆயிரம் பக்கங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஜெயலலிதா
தனது ஜாமீன் மனுவில், ‘’தனக்கு 66வயது ஆகிறது. சர்க்கரை வியாதி,
ரத்தக்கொதிப்பு நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்டுக்கொள்ள வேண்டும்.
பெங்களூர் சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் அச்சுறுத்தல்
உள்ளது. மேலும் , 100 கோடி அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனை’’
என்று குறிப்பிட்டுள்ளார்.இது
தவிர, தான் ஒரு சாதாரண நபர் அல்ல மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக
இருக்கிறேன் என்றும், தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிமுக தொண்டர்கள் உள்ளனர்.
அவர்களிடத்தில் தனக்கு நல்ல பெயர் இருக்கிறது என்றும், ஜாமீனில் சென்றால்
எங்கும் தப்பி ஓடமாட்டேன். வெளியே சென்றால் சாட்சிகளை கலைக்க மாட்டேன்
என்றும் கூறியுள்ளார். nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக