Jaya With-Choதீர்ப்பு இவ்வளவு கடுமையாக இருக்குமென்று சோ எதிர்பார்க்கவில்லையாம். ஆனால் இந்த எதிர்பார்ப்பு திமுகவிடம் ஏன் இருந்தது? சந்தேகப்படும் அவர், எல் டிபிள் யூ முறையீட்டில் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு கொடுக்கும் போது, அரசியலில் போயஸ் தோட்டத்து ராணிக்கு கொடுக்கப்படவில்லை என்றால் அதில் ஏதோ சூழ்ச்சி இருக்குமென்கிறார். முக்கியமாக சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் ஜெயா என்பது அவரது நம்பிக்கை மட்டுமல்ல, மற்றவர் நம்பியாக வேண்டிய ஆணை!
கோடிகளை சம்பளமாக வாங்கிய சட்டம் படித்த மேதைகள் உதவியால் வாய்தா மேல் வாய்தாவாக 18 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கை ஏதோ ஜெயா தரப்பு உண்மைக்கும், திமுக தரப்பு பொய்மைக்குமான நீதிப் போராட்டம் என்று சித்தரிக்கிறார் சோ. வெண்மணி படுகொலை வழக்கில் “கோபால கிருஷ்ண நாயடு போன்ற மேன்மக்கள் குற்றம் இழைத்திருக்மாட்டார்கள்” என்று சாட்சியை பார்க்காமல், ஆதிக்க சாதி ‘கௌரவ’மாக பார்த்த நீதிபதிகளின் நாட்டில் குன்ஹா எனும் நீதிபதி இப்படி தீர்ப்பளித்திருப்பது சோவாலேயே நம்ப முடியவில்லை.  பார்ப்பனீய நலன்களுக்காக எந்த தூரமும் போகக்கூடிய சோ உண்மையில் ஒரு மோசமான தீய சக்தியே கலைஞரை ராவோடு ராவாக சட்டவிரோதமாக ஜெயா கைது செய்த போது சட்டத்தின் முன் அனைவரும் சமம் அப்படி இப்படி என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல்  கலைஞர் மீது உள்ள காழ்ப்பு உணர்ச்சியை பச்சை பச்சையாக இந்த பிரகிருதி  கொட்டியதை மறக்க முடியுமா ? பார்பனர்களே வெட்கப்படும் அளவு கேவலமானவக்கிர வல்கர்ஆசாமி !

ஆனால் திமுக மட்டும் இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்று உறுதியாக எதிர்பார்த்திருந்தது எப்படி என ஒரு ஆழ்ந்த சந்தேகம் சோவிடம் இருந்தாலும் எச்சரிக்கையாக பேசுகிறார்.
“தங்கள் முன் வைக்கப்பட்ட ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்திருந்தாலும், அந்த ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பு இப்படி மட்டும்தான் அமையும் என்று சொல்லிவிட முடியாது. அதே ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு வந்திருக்க முடியும். அப்படி ஒரு தீர்ப்பு வருவதற்குப் போதுமான ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டதாக வழக்கின் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.”
தினமணி வைத்தியின் “கடவுளுக்கே சோதனையா” வாதங்களை விட சோவின் சாதுர்யமான சட்ட நுணுக்க பேச்சைக் கவனிக்க வேண்டும். அதாவது சாட்சிகள் வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பு அளிப்பதாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூற முடியும் என்று அடித்துச் சொல்கிறார் சோ. இது சரியா, தவறா என்ற விவரங்களுக்குள் அவர் போகவில்லை.
ஒரு வேளை கணக்கு காண்பிக்கப்படாத சொத்து, அதுவும் வருமான வரித்துறையிடம் அளிக்கப்பட்டது, அல்லது மன்னார் குடி கும்பலால் நடந்த தவறு, அதற்கும் ஜெயாவிற்கும் தொடர்பில்லை என்றெல்லாம் இந்த சட்ட நுணுக்கத்தின் பின்னே இருந்தாலும், தீர்ப்பு அவர் நினைத்த மாதிரி ஏன் அமையவில்லை?
தீர்ப்பு இப்படித்தான் வருமென்று திமுக நினைப்பதிலேயே ஏதோ பெரும் சதி நடந்திருப்பதாக சோ சொல்கிறார். ஆனால் அதற்கு மேல் விவரித்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்று நிறுத்திக் கொள்கிறார். ஏன், திரைமறைவு ஒப்பந்தங்கள் மூலம் நீதிபதி விலை போய்விட்டார், அதை நிறைவேற்றும் அளவு திமுகவிடம் பெரும் பணம் இருக்கிறது என்று சொல்ல வேண்டியதுதானே?
சட்டப்படியும் தவறு, சதிப்படியும் தவறு என்று  கூறிவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு என்று நல்லபிள்ளை போல நடிப்பது ஏன்? அங்கேதான் கவனிக்க வேண்டும், மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் லேடி ஆட்சி, கர்நாடகத்தில் கூட ஜெயாவின் மல்லையா உள்ளிட்டோரின் ஆசி பெற்ற காங்கிரசு ஆட்சிதான் நடக்கிறது. திமுகவோ அரசியல் செல்வாக்கிழந்து பலவீனமாக துவண்டு போயிருக்கிறது.
இந்நிலையில் கருணாநிதி நீதித்துறையை வளைத்து விட்டார் என்று சொல்வதோ, இல்லை மோடி, காங்கிரசு ஆட்சிகள் பணிந்து விட்டதாக அளப்பதோ அதிமுகவின் அடிமட்ட தொண்டர் வேண்டுமானால் பேசலாம். சோ பேசினால் சிக்கிக் கொள்வார். அதாவது சொந்த செலவில் அவர் ஆராதிக்கும் மோடி ஆட்சியை அவரே விமரிசிக்க வேண்டியதாகிவிடும்.
ஆகவேதான் (மோடி ஆசியுடன்) மேல் முறையீட்டில் தீர்ப்பே ரத்தாகிவிடும் என்று வாதிடும் சோ, அதற்கு ஆதாரமாக ஜெயா தொடர்பான ஏனைய வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பு ரத்தாகியிருப்பதை எடுத்துக் கூறுகிறார். அவாளுக்கான நலனென்று வரும் போது தர்க்கம் பயங்கரமாக உருவெடுக்கிறது.
சட்டத்தின் முடிவு இதுவென்றால் அரசியலில் ஜெயாவுக்கு எந்த குறையும் வராது என்று சத்தியமடிக்கிறார். திமுகவின் 2ஜி விவகாரத்தை பார்த்து மக்கள் ஜெயா மீது மிகுந்த அனுதாபம் கொண்டிருக்கின்றனர் என்றும் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்.
இருப்பினும் ஓ. பன்னீர் செல்வத்தின் அரசு அவர் ஆசீர்வதிக்கும் அம்முவின் அரசு போல இருக்காது என்று சிறு சந்தேகம் மனதில் தொக்கி நிற்கிறது. அதனால், திமுகவின் மீது மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பினை கணக்கில் கொண்டு புதிய அரசு ஜெயா வழிகாட்டுதலில் ஒழுங்காக நடந்தால் கருணாநிதி, ஸ்டாலினுக்கு செல்வாக்கு வரவே வராது என்று உபதேசிக்கிறார்.
இல்லையென்றால் என்ன நடக்கும்? அப்போதும் கூட ஜெயலலிதாவின் பின்னடைவை விட தமிழக அரசியல் எதிர்காலம் சோதனைக்குள்ளாகிவிடும் என்று கவலைப்படுகிறார். அதாவது ஜெயா குற்றவாளி என்று தண்டனை பெற்று வரும் அரசியல் சூழலால் திமுக வளர்ந்து விட்டால் அதுதான் சோதனையாம்.
மருமகள் உடைத்தால் மண்குடம் பொன்குடமாகும் சங்கதியேல்லாம் அழுகை டிவி சீரியல்களில்தான் வரவேண்டுமென்பதில்லை. அறிஞர் சோவின் அட்வைசில் கூட வரலாம்.
cho-with-jayaஜெயாவுக்காக இடுப்பை ஒடித்து வணங்கும் அடிமை அமைச்சர் கூட்டம் போலல்லாமல் சோ போன்ற சாணக்கியர்கள் மண்டையை உடைக்காமலேயே சட்ட நுணுக்கங்களை நேர்மறை ஒழுக்கங்களாக மாற்றுவதற்கு சளைக்காமல் முயல்கிறார்கள்.
“தண்டனை பெற்றால் உடனடி பதவி இழப்பு என்ற விதிமுறை சட்டத்தில் இல்லை; சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம் இந்த நிலையைத் தோற்றுவித்திருக்கிறது;….” என்று ஜெயாவின் பதவி இழப்புக்கு ஒரு லா பாயிண்டை கீழே எடுத்து வைக்கிறார் சோ.
“…இந்த மாதிரி குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகத்தான், எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்களுக்கு, அப்பீல் செய்வதற்காக மூன்று மாத அவகாசத்தை மக்கள் பிரிதிநிதித்துவச் சட்டத்தின் 8-ஆவது பிரிவின், ஒரு உட்பிரிவு அளிக்கிறது. அது செல்லுபடியாகாது என்ற சப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, குழப்பத்திற்கும், சிக்கல்களுக்கும் வழி வகுக்கக் கூடியது” என்று 14 மாதங்களுக்கு முன்னர், 24.07.2014 தேதியிட்ட துக்ளக் தலையங்கத்தில் எழுதியதை இப்போது நினைவு கூர்கிறார் சோ.
வழக்கமாக “அன்றே சொன்னேன் இன்று பலித்தது” என்று பெருமை பேசும் பாணியில் கூறப்பட்டிருந்தாலும் இதை கொஞ்சம் சீர்தூக்கி பார்த்தால் சோ நமக்கு மொட்டை அடிக்க முயல்வது நன்கு புரியும்.
96-ம் ஆண்டில் போடப்பட்ட வழக்கு 2013 வாக்கில் முடிவை நோக்கி நெருங்குகிறது. ஒருக்கால் அம்முவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் என்ன செய்வது என்று அய்யர் பரிதவிக்கிறார். அப்போது பார்த்து உச்சநீதிமன்றத்தின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8-வது பிரிவின் ஒரு உட்பிரிவு செல்லுபடியாகாது என்ற தீர்ப்பு வருகிறது.
உடனே பரப்பன அக்ரஹாரத்தின் தீர்ப்பு தரும் விளைவுகள் சோவின் மண்டையினுள் இறங்கி எச்சரிக்கையாக லா பாயிண்டை எடுத்து முன்வைக்கிறது. ஆக உச்சநீதிமன்றத்தில் அந்த குழப்பம்தான் இன்று ஜெயாவின் பதவியை பறித்திருக்கிறது என்று மதியூக்த்துடன் அவர் கண்டுபிடித்திருக்கிறார்.
ஆனாலும் மானங்கெட்டு பேசுவதெல்லாம் மதியூகம் என்று நம்பும் கூட்டம் இருக்கும் போது மொட்டை சோவிடம் இல்லை, அவரை நம்புவர்களிடம் இருக்கிறது என்றே நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்! vinavu.com